LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 519 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும்        ஆம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்:பிருஹதாரண்யக உபநிஷதம் 3.8.10 ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ‘கார்கி,  இந்த அக்ஷர பிரம்மத்தை அறியாமல், “அஹம் பிரம்மாஸ்மி  நான் பரம்பொருளாக இருக்கிறேன்” என்று வெறும் பெயரளவில் தன்னையே தான் போற்றிக் கொள்ளும் பேர் கொண்ட பார்ப்பானாக இருந்து கொண்டு, ஒருவன் இந்த உலகத்தில்…

    Read more

  • Old testament-13

    கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.சங்கீதம் 55:22 எவர் ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரோ அவரே சிறந்த நீதிமான் ஆவார், மேலும் நீதிமான் என்று கர்த்தர் குறிப்பிடுவதும் அத்தகையவர்களையே!தனக்கு உண்மையாக இருத்தல் என்பது ‘நான் இருக்கிறேன்’ என்னும் தன் இருப்புக்கு காரணமான, தன் உள்ளுணர்வாகவே விளங்கிக் கொண்டிருக்கும் கர்த்தரின் மீது மாறாத விசுவாசம் கொண்டிருத்தலே, ஒருவர் தனக்குத் தானே உண்மையாக இருத்தல் என்பதாகும். அவரே சிறந்த நீதிமானாக கர்த்தரால் கருதப்படுவார்.…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 1444 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை  செயற் இடை நேசம் சிவபூசை தானே. உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை :சுட்டும் தன்மை மறந்த நிலையில் நிற்றல், அதாவது தனக்கு அன்னியமாக ஏதும் இல்லை என்னும் உணர்வில் தன்னில் தானாகவே இருத்தல், இந்நிலையானது ஒவ்வொருவரின் ஆழ்ந்த நித்திரை நிலையில் இயல்பாகவே உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில்…

    Read more

  • New testament-4

    பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.மத்தேயு 16:19 ஒவ்வொரு மானுட உடம்பும் கோடிக்கணக்கான அணுக்களை கொண்டு பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலான வார்த்தை என்னும் மந்திரத்துடன் கலந்த பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் இம்மானுட தேகம் கட்டப்பட்டிருந்தால்? பரலோகம் சென்ற பின்பும் அக்-கட்டுக்கள் விலகாமல் கட்டப்பட்ட படியே இருக்கும். அதன்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 564 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்:மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்கள் கொண்ட  ஐவரால் ஆனது ஒவ்வொரு மானுட யாக்கையும் ஆகும். இந்த ஐவருக்கும் நாயகனாக, அதாவது இவைகளை படைத்தவனாக இருக்கும் பரம்பொருள் இவ்- ஐம்புலங்களையும் கடந்து, உள்ளிருக்கும் நாபிக் கமலத்தில், நடுவாய் உயிர்வித்தாக, ஐம்புலன்களால் உருவான ஊரென்னும் இத்தேகத்தின் தலைமகனாக  வீற்றிருக்கிறார். உய்யக்கொண்டேறுங்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 735 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலஉள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே. “ஓம். அது பூர்ணம் இதுவும் பூர்ணம்        பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்திலிருந்து       பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது” என்று ஈஸா வாஸ்ய உபநிஷதம்: சுலோகம் 1ல் சொல்லப்பட்டுள்ளது. தூய உணர்வாக, பூர்ணமாக, அண்டம் முழுவதுமாக வியாபித்து இருக்கும் பரம்பொருள் சமுத்திர நீருக்கு ஒப்பானது. அந்த பூர்ணத்திலிருந்து, அதன் தன்மையாகவே…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்