LATEST POSTS
-
“ஒளவியம் பேசேல்”
“ஒளவியம் பேசேல்” என்று அவ்வையார் ஆத்திச்சூடியில் அறிவுறுத்துகிறார். “பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.” என்று வள்ளுவர் கூறுவது, பிறர் இல்லாதபோது அவருடைய குறைகளைப் பேசுபவனின் குறைகளும், அவன் இல்லாதபோது பிறரால் ஆராய்ந்து பேசப்படும் என்பதே இதன் பொதுப் பொருள். இதே கருத்தை பைபிளிலும் காணலாம்: “For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will…
-
You Are That!- “no caste creed”
“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” (211) “தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம் தோன்றியுள்ளதும் பூரணம்” என்பது உபநிடத வாக்கு. சாதி,மதம்,சமயம் போன்றவைகள் தோற்றத்தில் தென்படுவைகளே ! அனாதியான தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தில் இவைகள் தென்படா !! எவ்வாறு கனவில் கண்ட காட்சிகள் நினைவில் பொய்யாகின்றதோ அவ்வாறே தோற்றத்தில் காணும் சாதி,மதம்,சமயம் போன்றவைகள் தோற்றத்திற்கு அப்பால் உள்ள ஆதியாம் பரிபூரணத்தில் பொய்பொய்யே !!! “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!
-
You Are That!- “the ruler of fame”
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்”. தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே என்பது இக்குறளின் பொதுவிளக்கம். திறன் எனப்படுவது ஒருவர் தனக்கு எத்துனை புகழ் சேர்ந்தாலும் அப்-புகழ்ச்சிக்கு தாம் அடிமையாகமால் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என இருத்தலேயாம். அஃதின்றி அப்புகழ்ச்சிக்கு அடிமையாகினின்….. விதிவசம் அல்லது சூழ்நிலையின் காரணமாக இத்தகையவர் கொண்ட புகழ் மங்கிப்போக அல்லது அவரை விட்டு விலகத்தொடங்கினால், அதை தாங்கிக்கொள்ளும் மனஉறுதியின்றி தாம் கொண்ட அப் புகழினை…
-
You Are That!- “fearless”
யாமிருக்க பயம் ஏன்? இது முருகப்பெருமானின் அருள் வாக்கு. நான் என்பது தன்மையொருமைப் பெயர் நீ என்பது முன்னிலையொருமைப்பெயர் அவன் அல்லது அவள் என்பது சுட்டுப்பெயர் யாம் என்பது தன்மைப்பன்மைப் பெயர். பயம் என்பது தனக்கு அன்னியமாக ஒன்றை காணும்போது மனதினில் உருவாகும் எண்ணங்களே. ஒவ்வொருவருக்கும் விழிப்பு , கனவு மற்றும் உறக்க நிலைகள் என்பது மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். இதில் விழிப்பு மற்றும் கனவு நிலைகளை பற்றும் பயஉணர்வு… ஆழ்ந்த உறக்க நிலையினில் செயலியந்தே காணப்படுகின்றது.…
-
You Are That!- “incomparable”
“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்”. குறள்-169, அழுக்காறாமை பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை என்பது இக்குறளின் பொதுப்பொருள். பொறாமை என்னும் குணம் எவரொருவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வாழ்வை மற்றவரின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்கின்றரோ அக்கணமே அவர்கள் அறியாமலேயே அவருள் இக்குணம் வேரூன்ற ஆரம்பித்து விடுகின்றது. அதன் காரணம் உருவாகும் திருப்தியின்மை இத்தகையவர்களை தான் இருக்கும் நிலையைவிட மேம்பட்ட நிலையினை அடைய ஆசை கொள்ள வைக்கின்றது.…
-
You Are That!- “good predictor”
“ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி”. அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:477) பொதுப்பொருள்: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். இங்கு வள்ளுவர் ஆற்றின் எனக்குறிப்பிடுவது ஒருவரின் ஆற்றலையேயாகும். ஈகை எனக்குறிப்பிடுவதும் பொன்னையோ அல்லது பொருளையோ அன்று. வழிவழியாக வந்த செவிச்செல்வத்தையே ! இச் செல்வத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒருவர் அதை பிறருக்கு ஈயும்போது அத்தகையவரின் ஆற்றலை தம் அறிவால்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

