“பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.”
என்று வள்ளுவர் கூறுவது, பிறர் இல்லாதபோது அவருடைய குறைகளைப் பேசுபவனின் குறைகளும், அவன் இல்லாதபோது பிறரால் ஆராய்ந்து பேசப்படும் என்பதே இதன் பொதுப் பொருள்.
இதே கருத்தை பைபிளிலும் காணலாம்:
“For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you.” (Matthew 7:2)
இதன் விரிவாக்கம்:
பிறரின் குறைகளைக் கூறுவதால் கிடைப்பது கணநேர அற்பமான திருப்தி மட்டுமே. ஆனால் காலம் மாறும்போது அதே குற்றச்சாட்டு தம்மீது திரும்பி வரக்கூடும். அப்போது அதை மறைக்க எவ்வளவு முயன்றாலும், முன்பு தம்மால் வேதனை பட்டவர்களின் திறன் மூலம் அக்குறைகள் வெளிப்பட்டே தீரும். மேலும், முன்பு தாம் பிறரை விமர்சித்ததைப் போலவே, பிறரும் தம்மை விமர்சிக்கும்போது ஏற்படும் வேதனை, முன்பு அனுபவித்த கணநேர அற்பமான திருப்தியை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
ஆகையால், புறங்கூறுவதால் ஒருவருக்கும் நிலையான நன்மை எதுவும் கிடைக்காது. மாறாக, பிறரின் நற்பண்புகளைக் காணவும், குறைகளை மறைக்கவும், இயன்றால் திருத்தவும் முயல்வதே அறமாகும் என்பதை வள்ளுவரும் அவ்வையாரும் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏


