LATEST POSTS


  • You Are That!- “excellence”

    “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”. ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். பொதுவாக ஒழுக்கசீலர்களாக விளங்குபவர்கள் தாங்கள் கடைப்பிடித்துவரும் ஒழுக்கம் காரணமாக தம் உயிருக்கு ஏதேனும் பங்கம் ஏற்படுனினும் அஃதை ஒரு பொருட்டென கொள்ளாமல், ஒழுக்கமே உயர்வென கருதி வாழ்வார்கள். எனினும் இத்தகைய ஒழுக்கச்சீலர்களும் தங்கள் உயிரினும் மேலானதாக கருதும் தம் உறவுகளுக்கு ஏதேனும் தீங்கு, தாம் கொண்டுள்ள ஒழுக்க…

    Read more

  • You Are That!- “Hardihood”

        “அஞ்சுவது யாதொன்றும் இல்லை;  அஞ்ச வருவதும் இல்லை“. :அப்பர் பெருமானின் தேவாரத் திருப்பதிகம் “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்” :  என்பது வள்ளுவர் பெருமானின் திருக்குறள். ‘அஞ்சாமை‘ என்னும் குணத்திலிருந்துதான் ‘ஊக்கம்‘  உருவாகின்றது. ‘அஞ்சாமை‘ என்பது சிவமயமாகவே குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட உயிரின் இயல்பான தன்மையாகும். சிவனருளை அறியாததின் காரணம் ‘அஞ்சாமை‘ என்பது வெறும் மானுட உடம்பின் குணமாகவே மட்டும் கருதப்படுவதால், அதன் வெளிப்படும் தன்மையும் ‘அவ்வுருவு‘ அளவேதான்  இருக்கும்… ஆகவேதான் இங்கு வள்ளுவர் பெருமான் ‘யானையையும் புலியையும்‘ உவமானப்பொருளாக எடுத்துக்…

    Read more

  • You Are That!- “a skilled orator”

    “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்  பழித்தது ஒழித்து விடின்“. உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா  என்பது பொதுப்பொருள். ஒரு மெய்ப்பொருளினின் மையக்கருத்தினை வெளிப்படுத்த விரும்பின் அதற்க்கு வெறும் நாவாற்றலை மட்டும் பயம்படுத்தி, அக்கருத்தினின் அளவை மிகவும் குறைத்து (மழித்து) சொல்லுதல், அல்லது அக்கருத்தின் அளவை அளவிற்கு அதிகமாக்கி நீட்டி முழக்கி சொல்லுதல், ஆகிய இவ்விரண்டுமே கேட்பவர் மனதினில் எந்தவொறு மாற்றத்தையும் உருவாக்காது, மாறாக எள்ளிநகையாடவே செய்வார்கள். அம்–மெய்ப்பொருளின் உட்கருத்தின் அளவை குறைக்கவோ அல்லது கூட்டவோ இல்லாமல் உள்ளது…

    Read more

  • You Are That!- “A balancer”

    “நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும் ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி”  (549)  60% of the human adult body is water,the brain and heart are composed of 73% water, and the lungs are about 83% water. The skin contains 64% water, muscles and kidneys are 79%, and even the bones are watery: 31%. ஒவ்வொரு மானிட தேகமும் நீரினாலேயே சூழப்பட்டுள்ளது. இந்நீரே…

    Read more

  • You Are That!- “Non-discrimination”

    “எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி”  (221) பஞ்ச பூதங்கள் அடங்கிய உயிர்திரள்கள் தோற்றத்திற்கு காலநிர்ணயம் உண்டு. ஆனால் பரம்பொருள் (நிர்குண ப்ரஹ்மம்)  தோற்றத்திற்கு அப்பாற்பட்டது.  மணிவாசகப் பெருமான் அருளியபடி  அது  “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி“. அதாவது ஆதியென்றே இல்லாத அனாதியான அதற்க்கு ஏது அந்தம்? ஆங்காங்கே தோற்றத்திற்கு வந்த உயிர்திரள்கள் தங்கள் தங்கள் வழிபாட்டிற்காக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒன்றேயான நாமரூபமற்ற பரம்பொருளுக்கு, ஓர் நாமமும் ஓர் உருவமும் கொடுத்து, அவரவர்களுக்கென…

    Read more

  • You Are That!- “existence without identification “

    “சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி”  (73) அறிவால் ஒன்றை அறிய அஃது அறிவுக்கு புறம்பாக இருந்தால்தான் அஃதை அறிவால் அறிய இயலும். இப்பூவுலகில் உள்ள உயிர்களின் அறிவின் வெளிப்பாடுகள் யாவும் தமக்கு புறம்பான மற்றவைகள் முன்னிட்டேயாகும். அதற்கு மாறாக தம்முள் பிரகாசிக்கும் அவ் – அறிவையே அறிய முற்படுமின்… “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே“ என்று நாவுக்கரசர்  தம் தேவாரத்தில் பாடியபடி, தன்னிலை மறைய,புறம்பான உலகங்களும் மறைய, இரண்டற்ற தன்மையில்,…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்