You Are That!- “a skilled orator”

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்“.


உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா 
என்பது பொதுப்பொருள்.
ஒரு மெய்ப்பொருளினின் மையக்கருத்தினை வெளிப்படுத்த 
விரும்பின் அதற்க்கு வெறும் நாவாற்றலை மட்டும் பயம்படுத்தி, அக்கருத்தினின் அளவை மிகவும் குறைத்து (மழித்து) சொல்லுதல், அல்லது அக்கருத்தின் அளவை அளவிற்கு அதிகமாக்கி நீட்டி முழக்கி சொல்லுதல், ஆகிய இவ்விரண்டுமே கேட்பவர் மனதினில் எந்தவொறு மாற்றத்தையும் உருவாக்காது, மாறாக எள்ளிநகையாடவே செய்வார்கள்.


அம்மெய்ப்பொருளின் உட்கருத்தின் அளவை குறைக்கவோ அல்லது கூட்டவோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே, உகந்த இடத்தில், உகந்த  தருணத்தில் , உகந்தவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தபடுமின்
அஃ து நிச்சயம்  பசுமரத்தாணிபோல் கேட்பவர் மனதினில் ஆழமாக பதியும். இத்தகைய சொல்லாற்றல் எவரொருவர் அப்பொருள் பொதிந்த வாழ்க்கையை  தம் வாழ்வினிலும் கடைபிடிக்கின்றாரோ


அத்தகையோருக்கே மழித்தலும், நீட்டலும் இல்லாத இச்சொல்லாற்றல் வாய்க்கப்பெறும்  என்பதாக பொருள் கொள்ளலாம்.


அவ்வையும் தம் கொன்றை வேந்தனில் 
 நிற்கக் கற்றல் சொல் திறம்பாமைஎன்று அதாவது செயலும் சொல்லும் ஒன்றேயென தம் வாழ்வினில் நிற்க கற்றவர், சொல்லும்  சொல்லே திறன் கொண்டதாக ஏனையோர் பயன்பெறும்வண்ணம் அமையும் என இப்பொருள் படுத்தியே கூறியுள்ளார்.


சாய்ராம்

Leave a comment