LATEST POSTS
-
You Are That! – “Knowledge to knowledge”
“தெருள்நிலைஇது எனத்தெருட்டி என்னுளத்திருந்து அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:321) தெருள்நிலை: என்பதிற்கு ‘அறிவின்தெளிவு நிலை’ என்று பொருள். தெருட்டி: என்பதிற்கு ‘அறிவித்தல்’ என்று பொருள். எவரொருவரும் தம் பெற்ற அறிவின் தெளிவு நிலையினை ‘எழுத்து, சொல் மற்றும் செயல் வடிவு’ மூலமாக புற உலகுக்கு வெளிப்படுத்தியே, தம் பெற்ற அறிவின்தெளிவு நிலைக்கு ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள இயலும். ஆனால் இங்கு வள்ளல் பெருமானின் அறிவுக்கு அறிவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி, வள்ளல் பெருமான் தாம்பெற்ற அறிவின் தெளிவு நிலைக்கு…
-
You Are That! – “Non-stop runner”
“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து”.(குறள்:496) பொதுப்பொருள்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. மெய்ப்பொருள்: வள்ளுவர் பெருமான் இங்கு கப்பல், தேர் என்னும் இரண்டையுமே ஏன் உவமானப் பொருளாகவே கையாண்டுள்ளார் ? நாம் வாழும் இந்த பூமி முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தாலும் சூழ்ந்து உள்ளது. அதே போல் ஒவ்வொரு மனித உடலும் முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தின்…
-
You Are That! – “Mighty person”
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல. இல்லாகித் தோன்றாக் கெடும்”. குறள் 479:பொருட்பால்: வலியறிதல்: பொதுப்பொருள்: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். மெய்ப்பொருள்: ‘மாயை’ என்பது இல்லாததை இருப்பது போல தோன்ற வைத்துக் கெடுப்பதே ஆகும். ‘அளவு’ என்பதிற்கு ‘ஞானம் மற்றும் தன்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘ஞானம்’ உள்ளவர்கள் இம் மாயையின் தன்மையை…
-
You Are That! – “Fearless Explicit”
“எச்சம் நினைக்கிலை எல்லாம் பெறுகஎன்று. அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி”. (அகவல்:233) ‘எச்சம்’ என்பது ஒன்றை ‘சொல்லி மற்றொன்றை மறைப்பது’ அல்லது ‘ஒன்றை கொடுத்து மற்றொன்றை இல்லை’ என்றும் பகர்வது. ‘அச்சம்’ பொருட்டு இத்தகைய ‘எச்சம்’ என்னும் தன்மை ஒவ்வொரு மனித உள்ளத்துடன் கலந்தே உள்ளதால், எவர் ஒருவராலும் எவரொருவருடனும் இணைவது என்பது இயலவே இயலாத ஒன்று. ஆனால் இங்கு ‘எச்சம்’ என்னும் தன்மை நினைவிலேயே ஒருபோதும் இல்லாமல், வள்ளல் பெருமானுடன் ‘இசைந்த’ அருட்பெருஞ்ஜோதியிடம் உள்ள அனைத்தும்…
-
You Are That! -” Persevering to the end”
பைபிள்:மாற்கு 13:13 “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்”. எவ்வாறு இறைவன் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்? எது இறைவனின் நாமமாக உள்ளது? பைபிள்: 2 கொரிந்தியர் 1:19 “தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ‘ஆம் என்றும், இல்லை’ என்றும் இல்லாமல், ‘ஆம்’ என்றே இருக்கிறார்”. அதாவது தாம் ‘ஆம்’ என்று இருப்போர்கள் ‘இல்லை’ என்னும் உலகத்தவர்களின் நடைமுறைக்கு மாறாகவே இருப்பதால் ! அவர்கள் என்றென்றும் வெறுக்கப்பட்ட மனிதர்களாகவே உலகத்தவருக்கு இருப்பார்கள். எனினும் உலகத்தவரின் பகைமையை ஒரு பொருட்டெனக்கொள்ளது…
-
You Are That! – “Repose with Action”
பைபிள்: (மத்தேயு 11:28) “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” Hazrat Inayat Khan says: “இளைப்பாறல் என்பது எல்லா சிந்தனை மற்றும் தியானத்தின் ரகசியம், வாழ்க்கையின் சாராம்சத்துடன் இணைந்திருக்கும் ரகசியம், இது எல்லாவற்றின் சாராம்சமாகும். ஒருவர் இளைப்பாறும் பழக்கமில்லாதபோது, அத்தகைவர் தன்னுள் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது.” கௌதம புத்தர்:“என்னுடையது என்ற எண்ணத்தாலேயே… உன்னுடைய சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது… அனைத்துமே திருப்பி கொடுக்கவேண்டிய கடன்கள்… என்ற…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

