LATEST POSTS
-
“எத்தனே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-8 ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள எட்டாவது பாடலில் உள்ள வரிகள். எத்தன்: என்பதற்கு ஏமாற்றுவோன் என பொருள் உள்ளது. அதாவது பார்வை, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன் மற்றும் நினைவு, நினைக்கப்படும் பொருள், நினைப்பவன் என்ற மூன்று விதமான தன்மைகளில், ஒருவர் சிவபெருமானை பார்ப்பவனிலும், பார்க்கப்படும் பொருளிலும் அதுபோன்றே நினைப்பவனிலும்,…
-
“ஈசனே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-7 “சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? ஈசன்: என்பதற்கு எப்பொருட்கும் இறைவன்; தகப்பன்; குரு; அரசன்; தலைவன்; மூத்தோன் என்று பொருள்கள் உள்ளது. சிவபெருமானை, எப்பொருட்கும் இறைவனாக பார்க்கும்போது, மணிவாசகப் பெருமான் தம்மெய்யையும் அப் பொருட்களில் ஒன்றாகவும்… சிவபெருமானை, தகப்பனாக நேசிக்கும்போது தாம் மகனாகவும்…. சிவபெருமானை, குருவாகவே கண்டபோது தாம் சீடராகவும்…. சிவபெருமானை, அரசனாக எண்ணும்போது தாம் குடிமகனாகவும்…. சிவபெருமானை, தலைவனாக நோக்கும்போது தாம் தொண்டனாகவும்…. சிவபெருமானை,…
-
“இறவிலே சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-6 “சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? இறவி: என்பது சாவு அல்லது இறத்தலை குறிக்கும் சொல். மணிவாசகப் பெருமான் ‘இறவிலே’ என்று இங்கு குறிப்பிடுவது வாழ்வின் இறுதிநிலை அன்று. தன்நிலையை சுட்டிக்காட்டும் ‘தான்’ என்பதே இல்லாத மெய்மறந்த நிலை. இந்நிலையை எட்டுவது என்பது இறத்தலுக்கு ஒப்பான அரிதான நிலை. இறவிலே எனும் அந்நிலையிலேயும் “உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” என மணிவாசகப் பெருமான் சொல்லிய…
-
“எய்ப்பு இடத்து சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-5 “சிவபெருமானே! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? எய்ப்பு: என்பதற்கு ஒடுக்க நிலை என்றும் ஒரு பொருள் உள்ளது. மனிதப் பிறப்பில் நிகழும் ஒடுக்க நிலை என்பது அவரவர்களின் ஆழ்ந்த நித்திரை நிலையேயாம். மனமும் ஒடுங்கப்பெற்ற அந்நிலையிலேயும் “சிவபெருமானே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக மணிவாசகப் பெருமான் சொல்லிய பாட்டின் பொருள் இது எனக்கொள்ளலாம். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
-
“இருள் இடத்து சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-4 மாணிக்கவாசகர் பிடித்த பத்து என்னும் அதிகாரத்தில் நான்காவது பாடலாக, “சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக பாடி உள்ளார். இருள்: என்பதற்கு ‘பிறப்பு’ என்று ஒரு பொருள் உள்ளது ‘பிறப்பு’ என்பது தாயின் கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகின்றது. அவ்வாறு கருவறையில் “ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்” என்று மாணிக்க வாசகர் தம் போற்றி திருஅகவலில் குறிப்பிட்டுள்ள படி , கருவறையில்…
-
“இம்மையே சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-3 ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள மூன்றாவது பாடலில் உள்ள வரிகள். இம்மை: என்பதற்கு இப்பிறப்பு; இவ்வுலக வாழ்வு என்று பொருள் உள்ளது. “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்” தவம் என்னும் அதிகாரத்தில் குறள் எண்:265 ல், வள்ளுவர் பெருமானும் ‘இம்மை’ இன்னும் சொல்லுக்கு ஒப்ப…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

