LATEST POSTS


  • You Are That!- “ஸத்சங்கம்”

    “ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம் நிர்சங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலத்துவம் நிச்சலத்வே ஜீவன் முக்தி”. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பொதுப்பொருள்: ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும். மெய்ப்பொருள்: ஸத்: என்பதற்கு ஸத்தியம் என்று பொருள் உள்ளது. ஸத்தியம் என்பது அவரவர்கள் உள்ளுக்குள் உறைந்தும், மறைந்தும் இருக்கும் சிவம் தான். சங்: என்பதற்கு…

    Read more

  • “I” is the name of Shiva”

    அப்பர் பெருமான் அருளிய நான்காம் திருமுறை! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்- அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில், அவன்தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே”! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்”- ‘சிவன்’ என்னும் நாமத்தை முறையாக சொல்பவர்கள் எவராயினும் அவர்கள் அத்துணை பேரையும் ‘தாமாகவே’ ஆக்கிக் கொண்ட செம்மேனிப் பெருமான்… “அவன் எனை…

    Read more

  • You Are That! – “Overcoming anger”

    திருமூலரின் திருமந்திரம்: 2264 “வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளியாமே” வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை: “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க” என்பது வள்ளுவர் பெருமானின் குறள் கூற்று. ‘சினம்’ என்னும் ‘வெகுளி’ பிறந்த ஒவ்வொருவர் தேகத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் குணம். இயல்பை முழுவதுமாக அழிக்க இயலாது. மாறாக ‘சினம்’ என்னும் இக்குணம் தம்தேகத்தை எப்போதும் பாதிக்காத அளவிற்கு, அதாவது ‘வெகுளியை’ எத்தருணத்திலும் வெல்லும்…

    Read more

  • “இன்பமே! சிக்கெனப் பிடித்தேன்”

    திருவாசகம் “பிடித்த பத்து”-10 “துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதி! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? ‘இன்பத்தை’ பற்றி உபநிஷத் வாக்கு. எது அளவு கடந்தது அதுவே இன்பம்; அல்பத்தில் இன்பமில்லை. அளவு கடந்ததை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு மணிவாசகப் பெருமான் சிவபெருமானை ‘இன்பமே’ என்னும் சொல்லால் துதித்துப் பாடியுள்ளார். இப்பிரபஞ்சம் என்பது எல்லையற்றது விரிந்து கொண்டே போவது. பிரபஞ்ச வடிவே சிவலிங்க வடிவம்.…

    Read more

  • “யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்”

    திருவாசகம் “பிடித்த பத்து”-9 “யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? ‘யான்’ என்னும் சொல் ‘நான்’ என்பதிலிருந்து மாறுபட்டது. ‘நான்’ என்பது: ‘சொல்பவன்’ தன்னை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொள்வதற்காக பயன்படுத்தும் சொல். ஆனால் ‘யான்’ என்பது, ‘சொல்பவன்’ தம்மோடு இரண்டறக் கலந்த தம் இறைவனையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தும் சொல். மணிவாசகப் பெருமான் தம்முடன் இரண்டறக் கலந்துவிட்ட சிவபெருமானையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக, ‘யான்’ என்னும் பதத்தை இங்கு கையாண்டுள்ளார்.…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே”. அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கே பரம்பொருளை அடைதலும் கைகூடும். நுண்ணியதாக உள்ள பரமாணு, உயிர் வித்தாக, அதாவது சிவமாகவே ஒவ்வொரு தேகத்துக்குள் இருந்து கொண்டும், அதுவே தன்னை…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்