LATEST POSTS
-
You Are That! – “Obscure to the Well-known”
“மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியர் என்று உந்தீபற தவத்தில் தலைவர் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்.பாடல் 12. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340 பொதுப் பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? மெய்ப் பொருள்: முற்றம்:- என்பதற்கு ‘வீட்டின் முகப்பு’ என்று பொருள் உள்ளது. அஃதினில்…
-
You Are That! – “Food,eater,unifier”
திருமூலரின் திருமந்திரம் – 193 “துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற் சென்றனவே“ “துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி“ துடுப்பு: என்பதற்கு அகப்பை என்று பொருள் உள்ளது. அகப்பையின் பயன்பாடு பானையில் இருக்கும் அரிசி உலையை நன்கு கிளறி சமைப்பதற்காகத்தான். அதுபோன்றே பானையை ஒத்த இம் மானிட தேக உலையுள், உயிர் வித்தாக விளங்கிக் கொண்டிருக்கும் ஒன்றேயான அரிசியை கிளற, அகப்பையை ஒத்த…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்: 6 ன் விளக்கம்:
திருமூலரின் திருமந்திரம்: 6 “அவனை ஒழிய அமரரும் இல்லை அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே”. அவனை ஒழிய அமரரும் இல்லை:- அமரத்துவத்தை அடையப் பெற்ற சான்றோர்கள் யாவருமே அருளே வடிவாய் விளங்கும் ‘சிவமேயாம்’. அருள் அற்ற (அவனை ஒழிய) அமரர்கள் என்பது எக்காலத்தும் இல்லை! அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை:- அரும் தவம் என்பதே சதா…
-
You Are That! – “Unfathomable”
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:21) Sant Kabir Das says: “The one who is confined in limitations is human, the one who roams into unlimited, is a Sadhu. The one who has dropped both limited and unlimited, unfathomableun is his being and understanding.” Interpretation: Human: -அறியாமையால் இவ்வுடம்பை ‘மெய் வாய் கண் செவி நாசி’ என்னும்…
-
You Are That! – “self-glorification”
திருமூலரின் திருமந்திரம்:- “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே” ‘தான்’ என்பதின் மூலம் ‘மனம், பிராணன், பஞ்சபூதங்கள்’ எனும் இம்மூன்றின் கலவையே. இம்மூன்றுக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆதிமூலமாகிய சிவமே. ‘மனம் சிவத்தில் அடங்க பிராணனும், பிராணன் சிவத்தில் அடங்க மனமும் அடங்கும்’ என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு. இவ்விரண்டும் அடங்க பஞ்சபூதங்களும் சிவத்தில் அடங்கிவிடும். ஏனெனில் இம்மூன்றும் ஒரே சமயத்தில்…
-
“விறகில் தீயினன்”
“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”. திருநாவுக்கரசர் பெருமான்: விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்:- விறகில் உராய்வு தன்மை உண்டானால் அஃதிலிருந்து உஷ்ணம் ஏற்பட்டு தீயாக வெளிப்படும். பாலை தயிராக்கி கடைந்தால் அஃதிலிருந்து வெண்ணை உண்டாகி அது உருகி நெய்யாக வெளிப்படும்… மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்-: விறகில் தீ எவ்வாறு மறைந்துள்ளதோ, பாலில் நெய் எவ்வாறு மறைந்துள்ளதோ, அவ்வாறே அரிதிலும்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

