LATEST POSTS


  • இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;

    திருவாசகம் பிடித்த பத்து- 2 “கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகரின் பிடித்த பத்து பதிகத்தில் உள்ள இரண்டாவது பாடல். அவ்வாறு சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிய பற்றானது இமைப்பொழுதும் விலகாமல், இடைவிடாது தொடர்ந்து பற்றியபடியே இருக்க வேண்டும். ஏனெனில் ‘சிக்கெனப் பிடித்த’ இறுக்கத்தில், உறுதியில் ஒரு சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கூட…ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அஃது வெறுமையால் நிரப்பப்பட்டு விடும். அதாவது அதுவரை கிட்டிய அவனது ‘அருளறிவு…

    Read more

  • “எம்பொருட்டு சிக்கெனப் பிடித்தேன்”

    திருவாசகம் “பிடித்த பத்து”-1 “சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?” இது திருவாசகத்தில் பிடித்த பத்து என்பதில் உள்ள முதல் பதிகம். வாஸ்தவத்தில் சிவனின் பேரருள் எங்கு, எப்படி, எத்தருணத்தில் வெளிப்படும் என்பதனை அவனே அறிவான்! பொதுவாக ஒரு செயல் விரைந்து செய்யப்பட வேண்டுமெனில் ‘இமைப்பொழுது’ என்னும் சொல் பயன்பாட்டிற்கு வரும். ‘கண் இமைத்தல்’ என்பது இயல்பாகவே தேகத்தில் நிகழும் செயல். அத்தகைய இமைப்பொழுது என்னும் மாத்திரைக்குள்ளும் (மாத்திரை என்பது காலத்தை குறிக்கும்…

    Read more

  • “மெய்பொருள் காண்பதே அறிவு”

    அப்பர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை “பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; “எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்;” பொந்தை: என்பது உடலை குறிக்கும் சொல். இதுபோன்று இவ்வுடலை குறிப்பதற்கு தமிழில் ‘மெய்’ என்றும் ஒரு சொல் உள்ளது. ‘மெய்’ என்பதற்கு ‘உடல் மற்றும் உண்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘மெய்பொருள் காண்பதே அறிவு’ என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு. அப்பர் பெருமான் தாம் சமணமதத்தை தழுவி இருந்தவரை தமது உடல் மெய்ப்பொருள் காணாத, ஒன்றுமில்லாத பொந்தையாக…

    Read more

  • You Are That! -” பஞ்சகச்சம், மடிசார்”

    “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து“ (அடக்கமுடைமை குறள் எண்:126) பொதுப்பொருள் : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. மெய்பொருள்: ஐந்து விதமான தன்மை உடைய ஐம்பொறிகளையும் ஒரே தன்மையுடைய பிராண சக்திக்குள் ஆமைபோல் உள்ளிழுக்க வல்லவனின் ஆற்றலால், அவனுடைய மூவேழு தலைமுறைகளும் காக்கப்படும். இத்தகைய ஆற்றல் உடையவர்கள் அடையாளமாக உடுத்தும் வஸ்திரமே ‘பஞ்சகச்சம்‘ என்பதாகும். ‘கச்சம்‘ என்பதற்கு ‘ஆமை‘ என்றும்…

    Read more

  • You Are That! -“Cosmic dance”

    “ஆனந்தாண்டவ நடராஜப் பெருமான்” நடராஜப் பெருமானின் ஆட்டம் என்பது பஞ்ச அம்பலங்களான பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் என்னும் இவைகளில் மட்டுமில்லை. பஞ்ச பூதங்களின் திரிபான ஒவ்வொரு மானுட யாக்கையிலும் கூட அம்பலத்தான் ‘சிவா-வாசியாக’ ஆடிக் கொண்டுதான் இருக்கிறான். ‘வாசி எனும் மூச்சாக அம்பலத்தான்’ இம்மானுட தேகத்தில் இடைவிடாது ஆடிக்கொண்டே இருப்பதால்தான்… ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், செவி, நாசி போன்றவைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘சிவா- வாசியாக’ இம்மானுட தேகத்தில் ஆடவில்லையெனின், ஐம்புலன்களும்…

    Read more

  • திருவாசகம் – திருப்பூவல்லி

    திருவாசகம் – திருப்பூவல்லி “இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்” இணையார்: இணை என்பதற்கு ஒப்புமை என்று பொருள். ஆகவே இணையார் என்பது ஒப்புமைக்கு அப்பாற்பட்ட , அவனுக்கு இணையாக எனக்கொள்ள எவரும் இல்லாதவர் என்றும் பொருளாகிறது. அப்படிப்பட்ட இணை வைக்கவே இயலாத அவன் திருவடிகள் தம் தலைமீதும் படவேண்டுமென எவரும் விரும்பின்… ‘இணையார்’ என்பதற்கு எதிர்மறை சொல்லாக ‘துணையார்’ என்பதைக் கொள்ளலாம். அதாவது இணை வைக்கவே இயலாத அவனுக்கு இணையாக எப்போது…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்