LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 9 ன் விளக்கம்:
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை என்னைப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வார்இல்லை தானே. பொன்னால் செய்தது போல ஒளி வீசி திகழும் தங்க நிற தாழ்ச்சடை பின்கழுத்தின் கீழாக என் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் இறைவன் நந்தி எம்பெருமான், அவனே நான் பணிந்து தொழும் எம் இறைவன் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாதவன் ஆதலின், மற்றவன் தன்னால் அவன் தொழப்படு வார்இல்லை தானே.திருச்சிற்றம்பலம்🙏
-
திருமூலர் திருமந்திரம் உரை 8 ன் விளக்கம்:
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே. “தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை”ஒவ்வொரு மானிட தேகமும் நீரினாலேயே சூழப்பட்டுள்ளது. இந்நீரே இத்தேகத்தில் உருவாகும் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நீரின் மற்றும் நெருப்பின் இயக்கங்களுக்கு உயிர்ப்பு எனும் உள் மற்றும் வெளி மூச்சுக்களே காரணமாகின்றது.அதாவது ஒவ்வொரு உள்மூச்சும் நீரினில் கலந்து நீரின் சக்தியாக ஆகும்போது…
-
New testament -1
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும்” என்பது திருவிவிலியத்தில் இடம்பெறும் ஒரு வசனம். உங்களை அளவீடு செய்பவர்கள் தங்கள் சொந்த லென்ஸ் மூலம் மட்டுமே பார்க்கும்போது உங்களை ஏன் விளக்க வேண்டும் ?? அமைதியாக இரு, அவர்கள் பார்க்கட்டும் !~ என்பது ஹஜ்ரத் ரூமியின் மேற்கோள். இவ்வகையில் ஒருவர் மற்றவரை அளவீடு செய்வது என்பது அவரவர்களின் பார்வையை பொறுத்தே அமைகிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டால், மற்றவர்களை அளவீடு செய்யும் மனப்பான்மை இயல்பாகவே…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 7 ன் விளக்கம்:
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாஎனில் அப்பனு மாயஉளன் பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்:ஆதியில் இருந்தது பிரணவசப்தம் ஒன்றே. மூவர் என்பது ‘இருக்கிறேன்’ என்னும் ஒவ்வொருவரின் உணர்வில் அடங்கியுள்ள தாய், தந்தை, மற்றும் அவரவர்கள், என்னும் மூன்றின் தன்மைகளை கொண்டது. இம் மூன்றும் சேர்ந்த ஒரே தன்மையாக, ஆனால் இம்-மூவர்க்கும் மூத்தவனாக, சப்த பிரம்மமாக அது ஆதியில் இருந்தே இருக்கிறது.…
-
திருமூலர் திருமந்திரம் உரை 5: ன் விளக்கம்:
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லைஅவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை:“ஒன்றரை தெய்வம்” எது என்பதற்கு எங்கும் பரவி இருக்கும் காற்றே என்பது ரிஷி யாக்ஞவல்கியரின் கூற்று. சிவம் என்பது சிவனின் உருவமற்ற நிலை. அதுதான் தகப்பன் உடம்பிலிருந்து ஓர் விந்து அணுவாக, அரை தெய்வமாக தாயின் கர்ப்பத்தை நோக்கி நகர்கிறது. எங்கும் பரவி உள்ள காற்று, திருவாசியாக, ஒரு…
-
திருமூலர் திருமந்திரம் உரை 4 ன் விளக்கம்:
“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்தனைப் போத விட்டானை பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே” அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை: புகலிடத்து என்தனை:அகலிடம் என்பது பூமித்(தாயை) குறிக்கும், அண்டத்து வித்து என்பது தந்தையிடமிருந்து வெளிப்படும் உயிர் அணுவை குறிக்கும்.தாயிடம் இருந்து வந்த உடம்பும் தந்தையிடம் இருந்து வந்த உயிரும் சேர்ந்ததே என் புகலிடம்(இருப்பிடம்) என்றிருந்த என்னை, போத விட்டானை: போத என்றால் போதிய அளவு என்று பொருள். அதாவது கருணையால்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

