LATEST POSTS
-
New testament-2
லூக்கா 6:48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. லூக்கா 6:49என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். Interpretation:‘நீரோட்டம்’ என்று இங்கு குறிப்பிடுவது, இறுதி நாளில் ஒவ்வொருவர் தேகத்தின் உள் பெரும் பகுதியாக சுற்றிக் கொண்டிருக்கும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 29 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்துஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்:பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று. இவ்வாறு ஒவ்வொரு உருவிலும் “இருக்கு” என்னும் சப்த ஸ்வரூப உணர்வாக, அதனதன் உருவினில் உருவாக, ஆனால் காண்பதற்கு அரிதிலும் அரிதாக இருக்கும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 28 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்:நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூத வடிவாகவே இருக்கும் இறைவன, இம்மானுட தேகத்தில் பஞ்சபூத அம்சங்களையும் முறையாக பொருந்தும் படி இணைத்து அவற்றோடு இணங்கி, அண்டம் பிண்டம் என்று எங்குமாய் இருப்பவன். பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்: எனினும் அண்டம் பிண்டம் என்னும் இவைகள் அற்ற…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 27 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான் அடிப் புண்ணிய மாமே. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்:மனிதப் பிறவி உருவாக காரணமான ஆதிமூலமான உயிர் வித்தை, குருவருளால் வாசியை திருவாசியாக மாற்றி, அதன் மூலம் இடைவிடாது அவனை தொடர்ந்து நின்று, சிவாசிவா என்று இடைவிடாது அடுத்தடுத்து தொழுது கொண்டிருந்தால், படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்:ஆதிமூலத்தின் உயிர்சக்தி, சிவாசிவா என்னும் திருவாசியின் வழியாக, பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 26 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று:வாசியில் இயங்கும் சூரிய கலையும், சந்திர கலையும் கூடும் தாமரையை ஒத்த நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் அந்தமில்லா ஈசனை, சூரியனும் சந்திரனும் சந்திக்கும் அந்தி மாலை பொழுதில், அவ்-ஈசனின் அருள், இத்தேகம் முழுவதும் பரவ வேண்டும் என்னும் பக்தி சிந்தனையோடு, நந்தியை நாளும் வணங்கப்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 25 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்:பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள். பிறப்பு என்னும் சங்கிலித் தொடரை அழிக்கும் பேரருளாளன்: இறந்தால் மீண்டும் மறுபிறவி உண்டு என்பது சனாதன தர்மத்தின் நியதி. அவ்வாறாயின் இறப்பில்லா பெருவாழ்வு அடைய பெற்றால்தான் மீண்டும் பிறவாமை என்று பேரு கிட்டும். அத்தகைய மரணமில்லா பெருவாழ்வை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

