LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 35 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக்கும் கிழக்குத் திசை எட்டொடும் ஆற்றுவேன் அப்படி ஆட்டவும் ஆமே. ஆற்றுகிலா வழி யாகும் இறைவனை: ஆற்றும் என்றால் இயலும் என்பது பொருள். ஆற்றுகிலா என்பது ஆற்றும் என்பதற்கு எதிர்மறை சொல், அவ்வகையில் ‘ஆற்றுகிலா வழி’ என்பதற்கு எல்லோருக்கும் இயலாது வழி என்று பொருள் கொள்ளவேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது வள்ளுவரின் வாக்கு. அன்பின் வழியே சிவத்தின் வழியாகும் என்பது திருமூலரின்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 34 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்:வாசனை இல்லாத வெறும் கூந்தலில் வாசனைப் பொருட்களை வைத்து அரைத்த சாந்தை கலந்து பூசியவுடன் எவ்வாறு கூந்தல் கஸ்தூரி போல் மணக்கின்றதோ, அவ்வாறே மண்ணினால் ஆன வாசனையில்லாத உடம்பில்… வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன:அமரத்துவம் அடையப் பெற்றவர்களுக்கு ஈசனால் அருளப்பட்ட மெய்ந்நெறியான, ஆயிரம் சூரியர்களுக்கு…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 33ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பதிபல ஆயது பண்டு இவ்வுலகம் விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. பதிபல: பல தெய்வங்கள், பண்டு: பழமையானஆதியிலிருந்து இவ்வுலகம் பல தெய்வ வழிபாடுகளை கொண்டதாய் இருந்தது மேலும் அந்தந்த தெய்வங்களை வழிபட பல விதிகளையும் அவர்களே வகுத்துக் கொண்டனர். அதற்கு மேலும் பலவகை தோத்திரங்களையும், வழிபாடுகளையும் செய்வதின் மூலம் கிட்டும் தற்காலிகமான மனம் அடங்கப் பெறுதலில்… மெய்மை உணரார்: தம் மெய்யில்,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 32 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்மேவு பிரான்விரி நீருலகேழையும்தாவு பிரான்தன்மை தானறி வாரில்லைபாவு பிரான்அருட் பாடலு மாமே. தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்:ஒவ்வொரு மானுட உடம்பில் மத்தியில் உயிர் வித்தாக வீற்றிருக்கும் தேவர்களுக்கெல்லாம் முதல்வனான பரம்பொருள் திசை பத்திலும் காற்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறான். திசையில் பத்து என்பது தேகத்தின் வெளியே காற்றால் சூழப்பட்டிருக்கும் எட்டு திசைகள், தேகத்தின் உள்ளே அதே காற்றே வாசியாக மேலும் கீழுமாக ஆக மொத்தம் பத்து திசைகளிலும் அவனின் அருள்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 31 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கேகண்ணகத் தேநின்று காதலித் தேனே. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்:பூமியை குறிக்கும் ‘மண்ணகம்’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது. இவ்வாறு அன்னமயமான சரீரம், ஒவ்வொரு சரீரத்துள்ளும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 30 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியைநான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்:எவ்வாறு வானில் உள்ள கருமேகமானது பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும் மழையாக பொழிகிறதோ, அவ்வாறே இறைவனும் பாரபட்சம் இல்லாமல் தம்மை தடுத்தாட்கொள்வான் என்று நம்பிக் கொண்டு, இடைவிடாது வெளிப்பாட்டுக் கொண்டிருக்கும் அவன் அருளை உணரும் வழி தெரியாமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள் அவ்விவேகிகள். ஆன்நின்று அழைக்கு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

