LATEST POSTS
-
You Are That!-“penance makes the rain”
“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.” வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை இவ்வாறு கூறியுள்ளார். எது வான்சிறப்பு ? வியன் எனும் பதத்திற்கு ஆகாசம் என்று பொருள். ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. பஞ்ச பூதங்கள் வடிவாகவே இறைவன் இருப்பதாக ஐதீகம்.வள்ளுவர் தம் மற்றொரு குறளில் கூறியுள்ளது போல் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. என்னும் அருளுக்கு பாத்திரமான அருளார்களால்தான் “அவ்வுலகம்” அல்லது ” வியன்உலகம்” என்னும் இவ்…
-
“கிட்டாதாயின் வெட்டன மற”
“கிட்டாதாயின் வெட்டன மற” “பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு”. திருவள்ளுவர் எப்பற்றினை பற்றி, விடாமல் போயின் இடும்பைகள் என்னும் துன்பம் பற்றி விடாது என்று எச்சரிக்கிறார்? வள்ளுவர் கூறும் பற்று என்பது ஒருவர் ஒரு பொருளின் மீது கொள்ளும் பற்று அன்று ! மாறாக பற்று கொண்ட அப்பொருள் தமக்கு கிட்டாவிடினும், அதன் மீது கொண்ட மோகத்தினின்று விடுபடமுடியாமல் தவிக்கும் பேராசை என்னும் குணப்பற்றையே ! ஒருவர் இப்பற்றை, பேராசை என்னும் குணப்பற்றினை…
-
You Are That!- “true parents”
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”. ஒருவர் தமக்கு இப்பொருள்தான் வேண்டும் என்று விரும்பி, முயன்று பெற்றவர் அதனை காலத்திற்கும் வைத்து கொண்டாடுவர். மாறாக எவ்விதமான முயற்ச்சியும் இன்றி இயல்பாக கிடைக்கப் பெற்ற பொருளை வைத்து கொண்டாடுபவர்கள் மிக சொற்ப காலத்திற்கே அதன் பயனை அனுபவிப்பார்கள்… “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்” அதாவது நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி. அகத்திய மஹரிஷியிடம் அவரது மனைவி…
-
You Are That!- “Athithi Devo Bhava”
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு”. வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான் என்பது இக்குறளின் பொதுப் பொருள். “அன்னத்தை மிகுதியாக உண்டு பண்ணவேண்டும், வீட்டை நாடி வந்த எவரையும் தள்ளி வைக்கக் கூடாது, வந்திருப்பவர்களுக்கு அன்னம் ஆயத்தமாய் உள்ளது என்போர் பெரியோர்கள்” –தைத்திரியோபநிஷத் வீட்டை நாடி வரும் விருந்தினர்களை இரு வகைப்படுத்தி சொல்லியுள்ளார் வள்ளுவர். ஒன்று நமக்கு எவ்வகையிலும் அறிமுகமில்லாத, முன்னறிவிப்பு ஏதுமின்றி…
-
You Are That!- “obedience in service “
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”. ‘வாலறிவன்’ என்னும் பதத்திற்கு அகமும் புறமும்மாக இருந்து இயங்கும் இறைவனை அறியப்பெற்றவன் என்று பொருள்.பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அகமும் புறமும் என்பதை க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: அத்தியாயம்-13 (1) குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள். (2) அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை. (13)அது…
-
You Are That!- “family saint”
“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை”. அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான் என்பது இக்குறளின் பொதுப்பொருள். “அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு. அவ்வாறாயின் எல்லாம் முன்பே நிர்ணயக்கப்பட்டதாயின், முயல்பவர்களின் முயற்சி எதைக்குறித்து ?…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

