LATEST POSTS


  • You Are That!- “A permanent resident “

    “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு“. உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள்.இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு  சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ? 1. இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது  இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற  தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி  அலைந்துள்ளது என்பது புலனாகின்றது. அவ்வாறு நாடி நாடிச்சென்ற   பிறவிகளில் தாவரங்கள், விலங்குகள், பறப்பன, ஊர்வன போன்ற…

    Read more

  • “ஏற்பது இகழ்ச்சி”

     “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்“. பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். “ஏற்பது இகழ்ச்சி” என்கின்றது ஆத்திச்சூடி. அதாவது  ஆறறிவு படைத்த மனிதனாக பிறந்தவன் தான் பிறந்த அதே சமூகத்தில் உயிர்வாழ வேண்டி கையேந்தும் நிலை ஏற்ப்பட்டால் ? அந்நிலைக்கு  அவன் தள்ளப்பட்டதின் காரணத்தினால்  … அஃது  அவன் பிறந்த குலத்திற்குத்தான் இழுக்காக  மாறுமேயன்றி ஏற்பவனுக்கு அல்ல. அதேபோல் ஒரு…

    Read more

  • “நன்றிமறவேல்”

    “நன்றி மறவேல்“- ஆத்திச்சூடி 21: “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது  அன்றே மறப்பது நன்று“. பொதுப்பொருள் : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஒருவர் தமக்கு செய்த உதவிதனை நன்றி மறவாமல் நினைவில் கொண்டிருத்தல், மேலும் அத்தகையவரினால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணம் ஏதேனும் தீங்கு நிகழ்ந்ததால் அதனை அன்றே மறத்தல் என்னும் இவ்விரு எண்ணங்களுக்கும் அவரவர் மனமே அடித்தளமாக அமைகின்றது. இயல்பாக…

    Read more

  • “கடிவது மற”

    “கடிவது மற” -ஆத்திச்சூடி“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”. நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது என்பது இக்குறளின் பொதுவிளக்கம். தீயானது ஒருவரை தீண்டிடின் அதனால் உருவாகும் விளைவுகள் அவரது தேகத்தின் வெளிப்புறத்தை காயப்படுத்தி, கண்களுக்கு தென்படாத வகையில் அவரது தேகத்தின் உட்புறத்திலும் பாதிப்பை உருவாக்கும். ஆயினும் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மூலம் அத்தேகத்தின் உள்வெளியில் உள்ள இருபுற புண்களையும் குணப்படுத்திவிடலாம்.…

    Read more

  • You Are That!- ” Knowledge Developer”

    “ஓதுவது ஒழியேல்” – ஆத்திச்சூடி-11 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”. பொது விளக்கம்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். -இங்கு வள்ளுவர் மணற்கேணியை உவமானப் பொருளாக கையாண்டுள்ளார் ! -ஒரு கேணியை தோண்டுமுன் நீர்வளம் உள்ள பகுதி முதலில் ஆராயப்படும். -பின் கேணி தோண்டப்படும் பொழுது எடுத்த எடுப்பிலேயே மேற்பரப்பில் நீர் ஊறுவதில்லை. -தோண்டிய இடத்திலேயே விடாமுயற்சியுடன் மேலும்மேலும்…

    Read more

  • “கற்பெனப்படுவது சொல்திறம்பாமை”

      “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை“ (கொன்றை வேந்தன்) என்பது  ஒளவையின் வாக்கு.    இங்கு ஒளவை கற்பெனப்படுவதை  உடல்  மற்றும்  மனம் சார்ந்தவையாகவோ அல்லது பெண் பாலருக்கு  மட்டுமே  உரித்ததாகவோ குறிப்பிடாமல்  சொல்லுக்கு  மட்டுமே உரித்ததாக  குறிப்பிடுகிறார். அதாவது  சொல் என்பது  ஐம்புலன்களின் ஐயுணர்வான எண்ணங்களின்  வெளிப்பாடேயாகும். இ ஃது  வாய்மையுடையதாக, எக்காலத்தும் மாறாததாக, திரும்பி பெறமுடியாத திறன் கொண்டதாக  இருத்தல் வேண்டும். இத்தகைய சொல் திறன் உடையவர்கள் யாராயினும் எவராயினும் அவர்கள் சொல்லின் செல்வர்களே. இத்தகைய சொல்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்