LATEST POSTS


  • You Are That!-“Enlightened intellect”

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்“. பொதுப்பொருள்: கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். இங்கு வள்ளுவர்பிரான் நுண்ணிய நூல் என்று குறிப்பிடுவது, நுட்பமான மெய்ப்பொருளை தன்னுள் மறைபொருளாக கொண்ட நூல்களேயாகும். இத்தகைய நுண்ணிய நூல்களை பலமுறை கற்றாலும், அதனுள்ளே பொதிந்துள்ள நுட்பமான பொருள் அவ்வளவு எளிதாக வெளிப்படாது. அதற்க்கு மாறாக கற்பவரிடம் இயல்பாகவே மிகுந்துள்ள உண்மையறிவே,இங்கு வள்ளுவர் உண்மையறிவு என்று சுட்டிக்காண்பிப்பது Enlightened…

    Read more

  • “உறவும் (பிரிவும்) பகையும்”

    “உறவினி லுறவும் உறவினிற் பகையும் அறனுற வகுத்த வருட்பெருஞ்ஜோதி“ அருட்பெருஞ்ஜோதிஅகவல் தனித்து வந்த ஒருவனுக்கு, ஒருத்தி என்னும் கணவன் மனைவி உறவும், அவ்வாறு மலர்ந்த உறவினிலிருந்து விரியும் மற்றொரு உறவாக மழலை செல்வங்களும், இல்லறதருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி ! இவ்வாறு மலர்ந்த உறவினில் எவரேனும் ஒருவர்க்கு அருள்தாகம் உண்டாகி, அருளாளர்களால் ஆட்கொள்ளப்பட, மற்றொருவர் அஃதினை பொருட்டெனக் கொள்ளவில்லையெனின், அதன் பொருட்டு  இல்லற உறவில் ஏற்படும்பிரிவை (பகையை), துறவற தருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி !!…

    Read more

  • You Are That!- “Unseen, but seeing”

    “காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:153) ‘அது அருட்பெருஞ்ஜோதி’ பார்ப்பவனின் பார்க்கும் சக்தியாக இருந்து பார்ப்பவனையும் அதன் மூலம் இவ்- உலகையும் காண வைக்கிறது. ஆயினும் அது (அருட்பெரும் ஜோதி) எதையும் காண்பதில்லை. எவ்வாறு ஒரு முப்பட்டை கண்ணாடி (Prism) வழியே ஊடுருவும் ‘வெள்ளொளி ‘பலவிதமான வண்ணங்களில் பிரதிபலித்தாலும் ‘அது வெள்ளொளி’ எப்போதும் மாறாத தன்மை கொண்டதாகவே இருக்கிறதோ அவ்வாறே… பார்ப்பவனின் பார்க்கும் சக்தி வழியே பல வண்ணமயமான உலகியல் காட்சிகளை பார்ப்பவனுக்கு…

    Read more

  • You Are That!- “god of love”

    “அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு“. பொதுப்பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே –திருமூலர்– அன்பு என்பது குணம் சார்ந்தது.எக்குணமும் தனித்து நிற்க இயலாது,மாறாக ஒன்றை பற்றியே நிற்கும் அதுபோல் அன்பு என்னும் குணமும்  உயிர்…

    Read more

  • You Are That!- “A secular being”

    “சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:115) சாதியின் உருவாக்கம் ஏற்படுவது, எப்போது ஒருவர் தான் இவர்களால்தான் பிறந்தோம் என்றோ அல்லது இவர்களை தாம்தான் பிறப்பித்தோம் என்றோ என எண்ணும் எண்ணத்தில் உதயமாகுவதே ஆகும்.சாதியும்,மதமும், சமயமும்(மரபுகள்) ஒன்றையொன்று பற்றியே நிற்க்கும். அநாதியான அருட்பெருஞ்ஜோதி பிறப்பு அல்லது தொடக்கம் என்பதே இல்லாதது. எது ஒன்றினாலும் பிறப்பிக்கப்படாதது. ஆகவே அஃ தினில் சாதி,மதம்சமயம் போன்றவைகளை காண இயலாது. அது போன்று சாதி, மதம், சமயம் போன்றவைகளை கொண்டு…

    Read more

  • You Are That!- “Modesty man”

    “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.   வள்ளுவர்பிரான் இங்கு பயன்படுத்திய அடக்கம் மற்றும் அடங்காமை என்னும் இவ்விரு பதங்களும் குணங்களை குறித்தே என்பதாக பொருள் கொளல் வேண்டும். அடங்காத குணங்கள் ஆசை,கோபம்,செருக்கு, வெறுப்பு,பகைமை போன்றவைகளாகும். இத்தகைய அடங்காத குணங்களை மட்டுமே எவரெவர் சார்ந்துள்ளனரோ அவர்களை அக்குணங்கள் ஆரிருளில் உய்த்துவிடும்.…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்