“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று“.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
இயல்பாக மனம் என்பதே சஞ்சலங்கள் நிறைந்தது. அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. அவ்வாறு இருக்க நன்றல்லதை அன்றே மறத்தல் அல்லது நன்றியை மறக்காமல் இருத்தல் என்பது
எங்கனம் சாத்தியமாகும் ? ஆகவேதான் வள்ளுவர் பெருமான்…
“நன்றி மறப்பது நன்றன்று” என்று நன்றிக்கு ஒரு கால நிர்ணயம் ஏதும் குறிப்பிடாமல் மனம் இயங்கும் வரை, அதாவது எக்காலத்தும் அந்நன்றியானது நினைவை விட்டு அகலாது இருத்தல் வேண்டும் என வலியுறுத்திகிறார். அவ்வாறு இருப்பின்…
இந்நன்றிக்கு உரியவரினால் ஏதோவொரு சூழ்நிலையில் நன்றல்லது என்னும் செய்கைகள் நிகழ்ந்தாலும், அஃது இவரது மனத்தளவில் எந்த ஒரு பாதிப்பினையும் ஏற்ப்படுத்தாது.

மாறாக நன்றிதனை நினைத்தலும், மறத்தலுமாக உள்ளவர்களின் மனமானது நன்றல்லது என்னும் செய்கைகளினால் தடுமாற்றம் அடைந்து, நன்றல்லதை மறக்கவும் இயலாமல், நன்றியை நினைக்கவும் முடியாமல் நிம்மதி இழந்து தவிப்பர் என்பதாக பொருள் கொள்ளுதல் சாலச்சிறந்தது.
சாய்ராம்

