LATEST POSTS


  • You Are That!- “upgrader”

    “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்”. குறள் 1023: என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும் என்பது இக்குறளின் பொதுவான பொருள். “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு”. குறள்-340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் இங்கு வள்ளுவர்…

    Read more

  • You Are That!- “The origin of energy”

    “ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி“- (அகவல்:55) ஏகம் அனேகம் ஆதாரமான நீரில் ‘ஏகம் அனேகம்‘ எனும் இவ்விரண்டுமே மறைந்துபோய் விடுகிறது. அது போன்றே ‘மெய், வாய், கண்,செவி, நாசி‘ என்னும் பஞ்ச இந்திரியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு உருவமும் ‘ஏகமே‘ ஆகும். இவ்வைந்து இந்திரியங்கள் வாயிலாக வெளிப்படும் உலகமே ‘அனேகம்‘ ஆகிறது. எனினும் இவ்விரண்டுக்கும் ஆதாரம் அருள்ஜோதியே. இதுவே ஏகமாகவும், அநேகமாகவும் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆதிமூலமான இவ்வருள் ஜோதி ‘வெளியில்‘ ஏகமான…

    Read more

  • You Are That!- “energy saver”

    ‘So whether you eat or drink or whatever you do, do it all for the glory of God’. Bible: 1 Corinthians 10:31 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251: பொதுவான பொருள்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? “உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை…

    Read more

  • You Are That!- “source of energy”

    “சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு”. குறள் 27: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம் என்பது இக்குறளின் பொதுப்பொருள். வகை: என்பதிற்கு தன்மை என்று பொருள். அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. பொருளும் அதன் தன்மையும் பிரித்துப் பார்க்க இயலாது. மேலும் எந்தவொரு பொருளும் தனித்தும் நில்லாது, வேறு ஒரு மூலப் பொருளில் அடங்கியே இருக்கும்.…

    Read more

  • You Are That!- “hunger reliever”

    “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”. குறள் 226: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். அற்றார்: என்பதிற்கு (ஏற்கும் மனம் இல்லாத) பொருள் இல்லாதவர் என்று பொருள் கொள்ளலாம். அழிபசி: என்பது கடும் பசி என்று பொருளாகிறது. கடும் பசி உண்டாகும் தருணத்தில் பட்டினியால் கண்பஞ்சடைந்து, பார்வை மங்கி அத்தகையவர் வானத்தை நோக்கினால்…

    Read more

  • You Are That!- “All Praise to the LORD”

    “எல்லா புகழும் இறைவனுக்கே” என்பது இறைவனுக்கேயுரிய வாசகம்! எவ்வாறு எல்லா புகழும் இறைவனுகே உரித்தாகின்றது ? ஆத்ம சொரூப இலக்கணம் பற்றி ரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியர் அவர்களால் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘ it’s unseen, but seeing; unheard, but hearing; unperceived, but perceiving; unknown, but knowing. There is no other seer but he, there is no other hearer but he, there is no…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்