LATEST POSTS
-
You Are That! – “Extoller”
“விமர்சனம்” “யாராவது உங்களை விமர்சிக்கும்போது அல்லது உங்களுடன் உடன்படாதபோது, உங்கள் இதயத்தில் வெறுப்பு மற்றும் விரோதத்தின் ஒரு சிறிய எறும்பு பிறக்கிறது. நீங்கள் அந்த எறும்பை அக்கணத்திலேயே அழிக்காவிட்டால், அது ஒரு பாம்பாக அல்லது ஒரு டிராகனாக கூட வளரக்கூடும்.” விமர்சனம் என்பது காரணப்பெயர்களை பற்றியே நிற்க்கும். அதாவது மானுடப்பிறப்பை எடுத்த வடிவங்கள் ஒன்றையொன்று சுட்டிக்காட்ட பயன்படுத்தும் பெயர்களே காரணப்பெயர்கள். காரணப்பெயர்கள் உள்ளவரை விமர்சனங்களும் மாறிமாறி இருந்ததுகொண்டேதான் இருக்கும். அஃதினை அழிப்பது என்பது இயலவே இயலாது. காரணப்பெயர்கள்…
-
You Are That! – “Real Vision”
“கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.” கண்ணோட்டம்: குறள்-577 “காட்சியுங் காணாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்: “It’s unseen,but seeing. There is no other seer but he” என்று பிருஹதாரணியகோபநிஷத்து: 3-7-23 ல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு உருவினுள்ளும் ஊடுருவி ஆட்சி செய்து கொண்டிருக்கும் உயிராகிய ஒளியே அவ்வுருவின் கண்களுக்கு காட்சியை அளிக்கிறது. எனினும் அவ்வுயிர் காட்சிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. கண்களின் வழியாக பார்த்து…
-
You Are That! – “contentment in life”
“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.” வெஃ காமை: குறள்- 171 பொதுப்பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். மெய்ப்பொருள்: இங்கு வள்ளுவர் குறிப்பிடும் ‘நடுவுநிலைமை’ என்பது, ஒருவர் தம்மிடம் உள்ளதைக்கொண்டு திருப்தியோடு வாழும் மனநிலையை ( நடுவு நிலையை) உருவாக்கிக்கொள்ள முயலவில்லை எனின்? இயற்கையாகவே அத்தகையவர் மனதினில், தம்மிடம் இல்லாத, ஆனால் பிறருக்கு உரிமையுள்ள நல்ல பொருளை…
-
You Are That! – “blinking stars”
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.” வாழ்க்கை துணை நலம்: குறள் 52: பொதுப்பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. மெய்ப்பொருள்: பகலில் இல்லாதது போல் தோன்றும், வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் இரவில் பிரகாசிக்கும். நட்சத்திரங்களின் பிரகாசம் ஒருபோதும் குன்றுவதில்லை,மாறாக பகல், இரவு மாற்றங்களினால் தான் இருப்பது, இல்லாதது போன்று தென்படுகிறது. அது போல… இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இயல்பாகவே இருந்தபோதிலும்,…
-
திருவாசகம்/ சிவபுராணம்-1
திருவாசகம்–சிவபுராணம் “ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.” ‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள். ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ” நீங்காத அறிவாய் இருக்கிறது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத அறிவாய்…
-
You Are That! – “The soul purifier”
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” (அதிகாரம்:வாய்மை குறள் எண்:298) பொதுப்பொருள்: நீரால் உடம்பின் வெளிப்புறமும் வாய்மையால் அதன் உட்புறமும் தூய்மை பெறும். மெய்ப்பொருள்: நீரால் ஒருவர்க்கு கிட்டிய உடம்பின் வெளிப்புற தூய்மையை, அடுத்தவர் தம் புறக்கண்கள் மற்றும் நாசி நறுமனத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் வாய்மையால் ஒருவர் பெற்ற அகத் தூய்மையை அத்தகையவரின் புறக் கண்கள் மற்றும் மற்ற பொறிவாயில் வழியாக வீசும் ஒளியை உணர்வதின் மூலமே அடுத்தவர்கள் அறிய இயலும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

