LATEST POSTS
-
You Are That! – “Noble character”
“உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.” அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்:குறள் 105 பொதுப்பொருள்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். மெய்ப்பொருள்: ‘உதவி செயப்பட்டார்’ என்பதற்கு உதவி செய்தவர் மற்றும் செயப்பட்ட அவ்-உதவியை பெற்றவர் என்னும் இருவரையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம். எவரொருவருக்கு தாம் செய்த உதவியை அக்கணமே மறக்க இயலுமோ, அத்தகையவர்க்கு கைமாறு கருதும் எண்ணமும் மனதில் எழவே…
-
You Are That! – “shapeless”
“உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்ச்சபையில் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(77) ‘உபயம்’ என்பது இரண்டு என்னும் சொல்லை குறிப்பது. ஒரு நாணயத்துக்கு வெவ்வேறு உருவங்கள் பொறித்த இரண்டு பக்கங்கள் இருப்பினும், அதன் மதிப்பில் இரண்டும் மறைந்து ஒன்றாய் ஆகிவிடுவது போன்று, தம் தேகம் முன்புறம், பின்புறம் என்று இரு வெவ்வேறு வடிவில், உபய- இரண்டு பக்கங்களாக இருப்பினும், தம் இரு புருவ மத்தியில் உள்ள சிற்ச்சபையில், நிறைந்த ஒளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி… தம் தேகத்தின் உபய…
-
You Are That! – “Honest Eyes”
“நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால். கண்ணல்லது இல்லை பிற”. அதிகாரம் : குறிப்பறிதல்: குறள் 710 மெய்ப்பொருள்: பிறர் மனக்கருத்தை அளந்து அறிய உதவும் கருவி அத்தகையவரின் கண்களேயன்றி வேறு இல்லை. எவ்வாறெனின் கண்கள் தவிர மற்ற உறுப்புகள் மனக்கருத்துக்கு மாறாக இயங்கினாலும், கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும். அதுபோன்றே பிறர் மனக்கருத்தை அளந்து அறிய முற்படுபவருக்கும், அத்தகையவரின் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை நேருக்குநேர் தம் கண்களால் கண்டு கிரகிக்கும் திறன் கொண்டிருப்பின்,…
-
You Are That! – “deserving of change”
“சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி” (205) சா-என்பதற்கு சாதல் என்றும், மாறு-என்பதற்கு பிறவி என்றும் பொருள் உள்ளது. ஆ-என்பது அழிவில்லாத ஆன்மாவை குறிக்கும் சொல். மாறு-என்பதற்கு ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல் என்றும் மற்றொரு பொருள் உள்ளது. “சாமாறு அனைத்தும் தவிர்த்து”- இறந்து இறந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதவிதமான பிறவிகளாக மாறி மாறி பிறப்பெடுக்கும் அவலநிலைகள் அனைத்தையையும் நீக்கி, “ஆமாறு”- அழிவற்ற ஆன்மாவாக என்னை மாற்றி அருளிய அருட்பெருஞ்ஜோதி. சாய்ராம்.
-
You Are That! – “pure consciousness”
“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) உருவம், பஞ்சபூத சம்பந்தம் கொண்ட மானுட வடிவமாக விழிப்பு நிலையில் மட்டுமே அறியப்படுகிறது. அருவம், பஞ்சபூத சம்பந்தம் இல்லாத ஆழ்ந்த உறக்க நிலையில் மட்டுமே உணரப்படுவது. உபயம், உருவ மற்றும் அருவத்தின் கலவை. இஃதினில் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட உருவமும் மறைந்து, அருவமும் மறைந்து, உருஅரு வடிவாக கனவு நிலையில் மட்டுமே அறியப்படுவது. விழிப்பு,உறக்கம், கனவு மூன்றும் அற்ற துரிய நிலையிலேயே, அதாவது உருவமும்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

