LATEST POSTS
-
You Are That! -“Good Appraiser”
“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்”. (குறள்:719) பொதுப்பொருள்: நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம். மெய்ப்பொருள்: மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களுக்கு, அம்-மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர்களையும், அறிய இயலாதவர்களையும் எளிதில் அடையாளம் காணவும் இயலும். எவ்வாறெனின் அம்-மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணர்ந்தோர் முகத்தில் தென்படும் ‘தெளிந்த அறிவுப்பிரகாசம்’, அத்தகையவரின் புரிந்து கொள்ளும் ஆற்றலை சொல்பவருக்கு…
-
You Are That! – “Quiet speaker”
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்”. (குறள்:28) பொதுப்பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். மெய்ப்பொருள்: நிறை: என்பதற்கு பூர்த்தி, அறிவு மற்றும் அழிவின்மை என்று பொருள் உள்ளது. இத்தகைய பொருள் கொண்ட ‘நிறைமொழி’ என்பது வார்த்தையை பயன்படுத்தாத ஓர் சொல். ஆகவே உலக வழக்கில் பேசப்படும் எதை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் இத்தகைய ‘நிறைமொழி மாந்தர்கள்’ என்பவர்கள் எங்கும் உண்டு. “THERE IS…
-
You Are That! – “Talent Consultant”
“அறிகொன்று அறியான் எனினும் உறுதி. உழையிருந்தான் கூறல் கடன்”.(குறள் 638) பொதுப்பொருள்: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும். மெய்ப்பொருள்: மனத்தினால் வடிவமிக்கப்பட்ட ஒவ்வொரு மனித உருவும் ‘அரசனுக்கு’ ஒப்பானதுதான். இத்தேகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் புத்தி ‘அமைச்சனுக்கு’ ஒப்பானது. மனம் சஞ்சலம் உடையது, தடுமாறும் தன்மை கொண்டது. எவ்வளவுதான் ‘அமைச்சருக்கு’ ஒப்பான புத்தி அறிவுறுத்தினாலும், மனம் புத்தியின் அறிவுரையை ஏற்காது தானும் அறியாதவனாகவே இருந்து, தன்(மனம்) போக்கில்…
-
You Are That! – “saver of lifes”
“கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே”. அருட்பெருஞ்ஜோதி அகவல் (968) “கொல்லா நெறி” என்றால் மற்ற உயிர்களை கொல்லாமை மட்டுமே அன்று. இத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிருக்கும் எவ்விதத்திலும் ஊறு விளைவிக்காமல் இருத்தலே ஆகும். ‘ஆக்கம்’ என்று ஒன்று இருந்தால் ‘அழிவு’ என்பதும் நிச்சயம் இருக்கும். ஆக்கம் என்னும் மாய தோற்றம் மறைந்தால் அங்கு அழிவு என்பது இல்லாமலேயே போய்விடும். இத்தகைய நிலையே “கொல்லா நெறி”. அதாவது எக்காலத்தும் எந்நிலையிலும் கடைபிடிக்கும் நெறியாகும். இவ்-அருள்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

