LATEST POSTS
-
You Are That! -“Absolute”
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:21) “ஒன்றென” ‘அறிவுக்கு’ அறியும் திறன் ஏற்ப்பட்ட பின்புதான் ‘அறிவு’ என்னும் பெயர் கொண்டாதாகி ஒன்றாய் பிரகாசிக்கிறது. “இரண்டென” இவ்-அறிவு ஒரு பொருளின் தன்மை கொண்டதாய் சேர்த்து அறியப்படும் போது இரண்டாய் பிரகாசிக்கிறது. “ஒன்றிரண்டென” இவ்-அறிவு, அறியப்படும் பொருளுடன் கூடி அறிபவனாக ஒளிரும் போது, ஒன்றிரண்டென (1+2=3) மூன்றாய் பிரகாசிக்கிறது. இவ்வாறு ‘அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன்’ என்று தனித்தனி வடிவாய், பொதுவினுள் நடிக்கும் இப்-பூரணப் பொருள்……
-
You Are That! -“deserving for grace”
“பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:151) எவ்வாறு ஒரே வஸ்து பெரியதாயும், அதுவே சிறியதாயும் மற்றும் அரியதாயும் இருக்க இயலும்? உவமானப் பொருளாக ‘கடலை’ எடுத்துக் கொள்ளலாம். கடலில் உள்ள ஒரே மூலப் பொருள் நீர். இன்-நீரினை கடலாக காணும் போது பரந்து விரிந்து பெரியதாகவும், ஓர் அலையாக காணும் போது மிகச் சுருங்கிய அளவில் சிறியதாகவும், மற்றும் மேற்பரப்பில் தெரியும் இவ்விரண்டையும் விடுத்து நீரின் உள் ஆழத்துக்கு செல்லும்போது அரிதிலும் அரிதான…
-
You Are That! – “inseparable oneness”
“திருவொற்றியூர் பாகம்பிரியாள்” எவ்வாறு நெருப்பு அதன் உஷ்ணம், பால் அதன் வெண்மை என்னும் இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்க இயலாதோ, அது போன்றே ஒரு பொருள் அதன் தன்மை இவற்றை தனித்தனியே பிரிக்க இயலவே இயலாது. “பாகம்பிரியாள்” என்பது அம்பிகையின் ஒரு நாமம். அச்சொல்லிலேயே சிவனும் உண்டு, சக்தியும் உண்டு. அதாவது அங்கு கூடிப்பிரிவதோ அல்லது பிரிந்து கூடுவதோ இல்லை. இத்தகைய ‘மெய்ஞானம்’ எல்லா தம்பதியருக்கும் வாய்க்கப்பெற்றால்? எல்லோரும் எக்காலத்தும் “பாகம்பிரியாள்” என்னும் சொல்லுக்குரியவர்களே. சாய்ராம்.
-
You Are That! -“Ever together”
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”.(குறள்:394) பொதுப்பொருள்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். மெய்ப்பொருள்: “கூடிப் பிரியேல்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. கிடைத்ததை பகிர்ந்துகொண்டு கூடி வாழ்வதே மனித இயல்பு. பொதுவாக இஃது ஏனையொருக்கு அவர்கள் தம் உள்ளத்தில் மகிழ்வை அளித்தாலும், ஞானியர்கள் (புலவர் என்பதிர்க்கு ஞானிகள் என்றும் ஒரு பொருள் உள்ளது) தம் உள்ளத்தில் அம்-மகிழ்வை ஏற்றுக்…
-
“God is light”
“God is light” Quote: தமிழ் மற்ற மொழிகளிலிருந்து வேறுபடுகிறதா? ஆய்வில் கிடைத்த பல தகவலில் முத்தான ஒன்று இதோ👇 ஏனைய மொழிகள் எல்லாம் மதம் சார்ந்து முதற் பொருளாகக் கடவுளைக் காட்டி நிற்கையில் தமிழோ மதசார்பற்ற மொழியாக இன்றைய அறிவியல் பேசும் முதற்பொருளினை அன்றே தொல்காப்பியத்தில் படம் பிடித்துக் காட்டியது. “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிபமொழிப இயல்புணர்ந் தோரே” (4) அதாவது, முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும்…
-
You Are That! -“Doer as told”
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்”. (குறள்:33) பொதுப்பொருள்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். மெய்ப்பொருள்: ஒல்லும்: என்பதிற்கு ‘பொருந்துதல்’ என்றும், ஓவாதே: என்பதிற்கு ‘நீங்காமை’ என்றும், வாய்: என்பதிற்கு ‘வாக்கு அல்லது சொல்’ என்றும், பொருள் கொள்ளலாம். ஒருவர் தம் சொல்லும், செயலும் ஒன்றை விட்டு ஒன்று நீங்காமல் எப்போதும் பொருந்திய வகையில், எங்கு சென்று எதை செய்தாலும் அவை அனைத்தும் அறவழி செயல்களே ஆகும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

