LATEST POSTS
-
You Are That! – “பஞ்சாட்சரம்”
திருஞானசம்பந்தர் தேவாரம்: “துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”. மெய்ப்பொருள்: துஞ்சுதல்: என்பதற்கு தூங்குதல் என்று பொருள். துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்: தூங்கும்பொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் பஞ்சாட்சர மந்திரத்தை நினைத்துப் போற்றுங்கள் . விழித்திருக்கும் பொழுது, இடைவிடாது பஞ்சாட்சர மந்திரத்தை மனதாலும், வாக்காலும் நினைத்துப் போற்றலாம். ஆனால் தூங்கும்பொழுது மனம், வாக்கு இரண்டும்…
-
You Are That! – “Brahma soroobam”
“உருவமும் அருவமும், உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) ‘உருவம்’ என்பது நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் கலவையுடன் கூடிய காணக்கூடிய தன்மை கொண்ட வடிவங்கள். ‘அருவம்’ என்பது ஐம்பூதங்களில் ஆகாயத்தை மட்டுமே தம்முள் கொண்ட ‘வெளி’ எனப்படும் காட்சிக்கு அப்பாற்பட்ட தன்மை கொண்டது. ‘உபயம்’ என்பதற்கு ‘இரண்டு’ என்று பொருள் உள்ளது. அதாவது ‘உருவம் அருவம்’ என்னும் இவ்விரண்டின் பொதுத்தன்மையான ஆகாயமெனும் ‘வெளி’ இஃதினில் அடங்கும். அவ்வெளிக்குள் வெளியாய்…
-
திருவாசகம்/சிவபுராணம்-3
“ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் “ஆனா அறிவாய்” அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.” ‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள் உள்ளது. ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா பல்லுயிர்க்கும் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ” நீங்காத அறிவாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத…
-
திருவாசகம்/சிவபுராணம்-2
“நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே“ (நோக்கரிய நோக்கே🙂 நோக்கு என்பதற்கு ‘கண் என்றும் பார்வை‘ என்றும் இரு பொருள் உள்ளது. இவ் ஊனக் கண்களால் உலகம் அனைத்தையும் காட்சிப் பொருளாக காண வைக்கும் ‘பார்வை என்னும் பார்க்கும் சக்தி‘ இம்–மானுட தேகத்துனுள் சிவமயமாகவே குடிகொண்டுள்ளது. எனினும் காட்சியாக பார்ப்பவன் தன்னுள் குடிகொண்டிருக்கும் அச்–சிவத்தை தம்முடைய ஊனக் கண்ணினால் கண்டு அறிவது என்பது இயலாது… “காட்சியும் கானாக்…
-
“தமிழே சிவம்”
“எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” (141) -தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று உள்ளது. உயிர்மெய் எழுத்து என்பது மெய்யுடன் உயிர் கலந்த எழுத்தே! -தமிழுக்கு எழுத்து வடிவமும், சொல் வடிவமும், பொருள் வடிவமும் கிட்டுவது மெய் எழுத்துடன் உயிரெழுத்து கலந்த பின்பே! -மெய் என்பதற்கு ‘உடல்’ என்று பொருள் உள்ளது. இம் மானுட யாக்கைக்கு தமிழைப் போன்றே ஆண், பெண் என்று சுட்டிக்காட்டும் சொல் வடிவம் கிட்டியது மெய்யுடன் உயிர்…
-
You Are That! – “Infinite Merciful”
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. அவையாரின் நல்வழி:9 பொதுப் பொருள்: ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள். மெய்ப்பொருள்:…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

