LATEST POSTS
-
You Are That! -“breath of all breath”
திருஞானசம்பந்தர் பதிகம்: “உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர் எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந் தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே”. பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும். பொ-ரை விளக்கம்: ஒரு ஜீவனின் நாசியில் இயங்கும் வாசியின் (மூச்சின்) இயக்கத்தை…
-
You Are That! – “சிதம்பர ரகசியம்-2”
“சிதம்பர ரகசியம்” எது ரகசியம்? எதுவொன்று அறியத்தக்கதாகவும், அதே வேளையில் அவ்-அறிவுக்கு அவ்வளவு எளிதில் புலப்படாத தாகவும், ஆனால் எப்பொழுதும் இருந்துகொண்டும் உள்ளதோ அதுவே ரகசியம். அது எஃதெனின் அண்ட சராசரத்தின் நுட்பங்களை எல்லாம் வெளிப்படுத்தும் ‘அறிவு’ என்னும் சுடர்க் கடவுள். அஃது எவராலும் எளிதில் அறியப்படாமல் ‘சித்’ தாகவே இருந்துகொண்டிருக்கிறது. எந்தவொரு பொருளையும் அறிய வேண்டுமெனின் அதன் தன்மை வழியாகவே அப்பொருளை அறிய இயலும். எடுத்துக்காட்டாக பாலின் தன்மையான வெண்மை என்னும் மூலம் வழியாகவும், அதுபோன்று…
-
You Are That! – “பட்டயம் இல்லாதவர்”
“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு பட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”. குதம்பை சித்தர் பாடல்: 215 வெட்டவெளி: என்பதற்கு பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே! பட்டயம்: என்பதற்கு ஒருபொருளை சொந்தம் கொண்டாட ஒருவர் பயன்படுத்தும் தாமிர சாசனம். பெயர் உருவம் இனம் ஜாதி மதம் மொழி உறவுகள் அந்தஸ்து தேசம் போன்ற இவைகள், மனிதனாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருமே தம்மைத் தாமே சுட்டிக் காட்டிக் கொள்ள…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 20 ன் விளக்கம்:
திருமூலரின் திருமந்திரம்: 20 “முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் அலையது தானே”. பொதுவாக மானிட வர்க்கம் ‘பிறப்பு’ என்று வரும்போது, கரு உற்பத்தி தொடங்கி பிறக்கும் வரை அதன் நெறிமுறைகளை ஆராயத் தொடங்கும். ஆனால் அதே மானிட வர்க்கம் ‘இறப்பு’ என்று வரும்போது, தம் முடிவைப் பற்றி முன்னரே ஆராய்ந்து அறிந்துகொள்ள பயமே கொள்ளும். மரணமில்லா பெருவாழ்வு அடையப் பெற்ற சான்றோர்களின் வாழ்வை…
-
“மடிந்தது சிவாயம்”
“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும் வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும் மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”. சிவவாக்கியர் பாடல்: 369 ஆம் ‘அழித்தல்’ என்னும் தன்மை கொண்ட ‘சிவம்’ மடிய வேண்டும். அத்தன்மை மடிந்தால்தான், ‘சிவம்’ அருளாக மாறி சிவனருளாக வெளிப்படும். அதாவது அழிக்கும் தன்மைகொண்ட ‘சிவம்’ அருளுடையதாக மாற வேண்டுமெனில்… வடமொழியில்: ஹூ(hU) என்பதற்கு invoking-அழைத்தல் என்று பொருள் உள்ளது. அதாவது அழிக்கும் தன்மைகொண்ட சிவத்தை அருளுடையதாக ஆக்க, சிவமானது…
-
You Are That! – “பஞ்சாட்சரம்”
திருஞானசம்பந்தர் தேவாரம்: “துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”. மெய்ப்பொருள்: துஞ்சுதல்: என்பதற்கு தூங்குதல் என்று பொருள். துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்: தூங்கும்பொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் பஞ்சாட்சர மந்திரத்தை நினைத்துப் போற்றுங்கள் . விழித்திருக்கும் பொழுது, இடைவிடாது பஞ்சாட்சர மந்திரத்தை மனதாலும், வாக்காலும் நினைத்துப் போற்றலாம். ஆனால் தூங்கும்பொழுது மனம், வாக்கு இரண்டும்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

