LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 139 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ”தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே”- .”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே”- இது திருமூலரின் திருமந்திர உரை எண்1680: தெளிவு குருவின் திருமேனி காண்டல்: ‘தெளிவு’ என்பது இருளிலிருந்து பிறப்பதில்லை, ஒளியிலிருந்து தான் பிறக்கும். மேலும் அவ்வொளியானது…
-
“கலையாத கல்வியும்”
“கலையாத கல்வியும்” அபிராமி அம்மைப் பதிகம்: பொதுவாக கல்வி என்பது ஒருவர் நூல்களின் வழியாகவோ, செவி வழியாகவோ அல்லது ஆராய்தல் மூலமாகவோ கற்றுக்கொள்வதையே கல்வி எனக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய கல்விகள் யாவும் ‘இருக்கு மற்றும் இல்லை‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளுக்கு உட்பட்டதே யாம்! அதாவது ‘உண்டு‘ என்று இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இல்லாமல்‘ போவதும், அதுபோன்று ‘இல்லை‘ என இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இருப்பது‘ போன்றுமாக… ‘நிலையான கல்விகளாக‘ இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதால், இத்தகைய…
-
You Are That! – “Ever Visible Shivam”
திருமூலரின் திருமந்திரம்: 309 “மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” . மரம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கின்றது, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக, இயற்கை உரமாக, நாம் உண்பதற்கு உதவும் காய், கனி, கீரை போன்றவற்றை தருகின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன… மரத்தை மறைத்தது மாமத யானை: மேற்கூறிய மரத்தின் தன்மைகள் யாவும்…
-
You Are That! – “Not This (or) That”
“அதுஇது என்னாது அனைத்து அறிவாகும் அதுஇது என்று அறிந்து உந்தீபற அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் :39 ஒவ்வொருவர் உள்ளும் இடைவிடாது சதா ஒலித்துக் கொண்டிருக்கும் ‘நான்’ எனும் சப்த உணர்வு, பஞ்ச பூதங்களின் கலவையான அவர்கள்தம் தேகத்தை ‘இது’ என்றும் ஏனையோர்களின் தேகத்தை ‘அது’ என்றும், அதாவது பஞ்ச பூதங்களாக அறியாமல் உடம்பாகவே அறிந்துகொண்டு, ‘அது இது’ என்று இடைவிடாது சுட்டிக் காண்பிக்கும் சிற்றறிவை…
-
You Are That! – “பாண்டவர்கள்”
“பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டார் என்று உந்தீபற காணாதார் காணார் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்: பாடல் 35: சிவத்தின் நாமம் ‘நான்’ என்பதாகும் என்பது யஜுர் வேதத்தின் இறுதி வாக்கு! அது சக்தியின் அம்சமாக,‘திரௌபதி யாக’, அர்த்தநாரீஸ்வரராக ஒவ்வொரு மானுட தேகத்திலும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்னும் ஐம் பொறிகளும், புலப்படாத அறிவு என்னும் ஆறாவது பொறியும்…
-
You Are That! -“Good potter”
திருமூலரின் திருமந்திரம்:143 “மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே” . ஒவ்வொரு மானுட தேகமும் ‘நல்வினை, தீவினை’ என்னும் இவ்விரண்டு வினைகளை அனுபவிப்பதற்காகவே பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் வடிவமைக்கப் படுகின்றது. இவற்றுள் நல்வினையை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்படும் உடம்பு, அப்-பாத்திரம் உருவாக காரணமாக விளங்கும் ‘ஞானம்’ கொண்ட அவனின் பெற்றோர்களால் நன்கு தீயிலிட்டுச் சுடப்பட்ட பாத்திரமாகவே, அதாவது ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

