LATEST POSTS
-
You Are That! -“Expression of the universe”
“அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பரம்பர மணியே” (அகவல்:1291) அண்டம் எனப்படுவது ஒளிக்குள் அடங்கப்பெற்றது. அருட்பரகாச வள்ளலாரின் தேகம் முழுவதும் ஒளியுறுவமே! இவ்-அண்டத்தில் காணப்படும் மற்றும் அறியப்படும் அனைத்து விதமான ஆற்றல்களையும், ஒளியுறுவான வள்ளளாரின் அண்டமயமான தேகத்துக்குள்ளும் காட்டிய… பரம்பர: வழிவழியாய் வந்த மணியே!! வள்ளலார் பெற்ற இவ் அனுபவத்தை ஓர் புராணக்கதை வாயிலாகவும் அறியலாம்… “ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவிக்க, யசோதை கிருஷ்ணனிடம் வாயைத் திறந்துகாட்டு…
-
You Are That! -” intuitively doer “
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”. (குறள்: 505) மெய்ப்பொருள்: இக்குறளில் வள்ளுவர்பிரான் ‘பெருமைக்கும்’ என்பதினை ஒருமையிலும், ‘ஏனைச் சிறுமைக்கும்’ என்பதினை பன்மையிலும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு செயலால் ஒருவரின் உள்ளம் நிறைவு பெற்று, ஏனையோர் புகழ்ச்சி இன்றி தனக்குத் தானே ‘பெருமை’ கொள்கின்றதோ! அதுவே உண்மையான பெருமையாகும். மேலும் இப்-பெருமையை இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக…
-
You Are That! -“Inconceivable”
“படிமுடி கடந்தனை பார் இதுபார் என அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:261) ‘படி’ என்பதிற்கு வாசி(மூச்சு) என்றும் ஒரு பொருள் உள்ளது. ‘படிமுடி’ என்பதனை ‘வாசியின் முடிவு அல்லது அந்தம்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது அயனும் மாலும் காணா அடிமுடியினை காண! படிமுடி கடந்தனை: வாசியின் முடிவை கடந்து என்னைப் பார்! வாசியின் முடிவே, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியின் ஆதிவடிவம். இங்கு ‘பார்’ என்னும் சொல்லை அடுக்குத் தொடராக இருமுறை வள்ளல் பெருமான் பயன்படுத்தியுள்ளார்.…
-
You Are That! -“Real pathfinder”
“எவ்வழி மெய்வழி என்பவே தாகமம் அவ்வழிஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:201) ‘மெய்‘ என்பதற்கு உண்மை என்றும் மற்றும் உடல் என்றும் பொருள் உள்ளது. மெய்வழி என்பது: “என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடைய அன்பே” “என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடைய அன்பே” (அகவல்:1481-1484) அதாவது ‘மெய்’ என்னும் இவ்வுடம்புக்குள்ளேயே அரும்பி இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை கண்டு அஃ தினை ‘இம்மெய்’ சென்றடையும் வழியே ‘மெய்வழி’ என்னும் உண்மையான வழியாகும். ஆகமம்: இவ்…
-
You Are That! -“light source”
“அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே” (அகவல்:901) 1. வேதத்தின் மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம். 2.அஷ்டாவக்ர கீதை:2:2 நானொருவனே இவ்வுடலை ஒளிர்விப்பது போன்று இவ்வுலகையும் ஒளிர்விக்கின்றேன். அதுவே அதுவாய்: ‘அது’ என்பது வேதவாக்கியத்தின் பொருளான ‘அது’ என்னும் அருட்பெருஞ்ஜோதியே! மெய்,வாய், கண், காது, மூக்கு…
-
You Are That! -“Inaccessible”
“எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:287) எஞ்சேல் உலகினில்: உலகம் என்பது பலவிதமான கேடுடைய குணவடிவம் உடையது. அதாவது ஒரு குணம் மற்றொன்றாக பின் அதுவே வேறாக என்று தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஆசைவடிவம் அது நிறைவேறாத போது நிராசையாக, பின் அதுவே குரோதமாக, துவேஷமாக என்று தொடர்ந்து இடைவிடாது மாறிக்கொண்டே இருப்பதையே ‘எஞ்சேல் உலகினில்’ என்று வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்-குணங்கள் யாவுமே பஞ்சபூத சம்பந்தமான உருவை பற்றியே நிற்க்கும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

