LATEST POSTS
-
You Are That! -“Good potter”
திருமூலரின் திருமந்திரம்:143 “மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே” . ஒவ்வொரு மானுட தேகமும் ‘நல்வினை, தீவினை’ என்னும் இவ்விரண்டு வினைகளை அனுபவிப்பதற்காகவே பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் வடிவமைக்கப் படுகின்றது. இவற்றுள் நல்வினையை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்படும் உடம்பு, அப்-பாத்திரம் உருவாக காரணமாக விளங்கும் ‘ஞானம்’ கொண்ட அவனின் பெற்றோர்களால் நன்கு தீயிலிட்டுச் சுடப்பட்ட பாத்திரமாகவே, அதாவது ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’…
-
You Are That! – “Silent talker”
“சொல்லும் இடம் அன்று; சொல்லப் புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற என்றால் நாம் என் செய்கோம் உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 29 சொல்லும் இடம் அன்று; – சிவபெருமானின் வாசஸ்தலம் என்பது நாவின் அசைவின் வழியே உண்டாகும் சொல்லினால், அங்கு உள்ளான், இங்கு உள்ளான் என்று சுட்டிக் காண்பிக்கும் இடங்களில் அன்று; “சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி” சொல்லப் புகும்…
-
You Are That! – “Source finder”
“வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர் பித்து ஏறினார்கள் என்று உந்தீபற பெறுவது அங்கு என் பெணே உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்: பாடல் 28. விளக்கம்: ‘வித்து’ என்பது தோற்றத்திற்கு காரணமாக இருப்பது. எனினும் அவ் வித்தின் சக்தி, எவ்வாறு ஒரு மரத்தின் விதைகள் மண்ணுக்கு கீழே மறைந்தே இருக்குமோ, அவ்வாறே ஒவ்வொரு மானுடப் பிறப்பின் தோற்றத்திற்கு காரணமான ஆதி மூலமான வித்து சக்தி ‘காட்சிக்கு’ அப்பாற்பட்டதாகவே விளங்கிக் கொண்டு இருக்கின்றது.…
-
You Are That! – “பிரஜ்ஞானம் பிரும்மம்”
“அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு அவிழும் இவ் அல்லல் என்று உந்தீபற அன்றி அவிழாது என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 27. விளக்கம்: அவிழ இருக்கும் அறிவுடன்:- அறிவு என்பது அறியப்படும் பொருள் அறிபவன் என்னும் இவ்விரண்டின் தன்மையுடன் இணைந்தே இருக்கும். அதாவது ஒவ்வொரு பிறப்பின் போதும் ‘அறிவு அறியப்படும் பொருள் அறிபவன்’ எனும் இம்மூன்றும் அப்- பிறப்பினுடையே தோன்றி அல்லது கட்டப்பட்டு, இறக்கும் தருணத்தில் அவ்-இறப்பினுடையே மறைந்து…
-
You Are That! – “Untouchable, but accessible”
“எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார் விட்டார் உலகம் என்று உந்தீபற வீடே வீடாகும் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 24. விளக்கம்: பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டின் தன்மை கொண்ட ஒவ்வொரு மானிட தேகமும் சிவபெருமானின் திருமேனியாகவே விளங்கிக் கொண்டிருக்கின்றது. இஃதினில் (இத்தேகத்தில்) இயங்கிக் கொண்டிருக்கும் பிராண, அபான வாயுக்களில் யோகக்ஷேமமாகவும், அதாவது திருவாசியாகவும் சிவபெருமானே…
-
You Are That! – “பஞ்சாட்சரம்”
சிவவாக்கியர் பாடல்: 073 “சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே” அட்சரம்: என்பதற்கு ‘அழியாத எழுத்து’ என்று பொருளும், கபாடம்: என்பதற்கு ‘காவல்’ என்றும் பொருள்கள் உள்ளது. அதாவது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு மானுடப் பிறப்பிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘வாசி’ என்னும் மூச்சானது, காவல் அற்ற வாசலை கடந்து செல்லும் வாயு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

