“அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு
அவிழும் இவ் அல்லல் என்று உந்தீபற
அன்றி அவிழாது என்று உந்தீபற”.
திருவியலூர் உய்யவந்த
தேவ நாயனார் அருளிய
திரு உந்தியார். பாடல் 27.
விளக்கம்:
அவிழ இருக்கும் அறிவுடன்:-
அறிவு என்பது அறியப்படும் பொருள் அறிபவன் என்னும் இவ்விரண்டின் தன்மையுடன் இணைந்தே இருக்கும். அதாவது ஒவ்வொரு பிறப்பின் போதும் ‘அறிவு அறியப்படும் பொருள் அறிபவன்’ எனும் இம்மூன்றும் அப்- பிறப்பினுடையே தோன்றி அல்லது கட்டப்பட்டு, இறக்கும் தருணத்தில்
நின்றவர்க்கு:-
அருட்பெருஞ்ஜோதி அகவல்:113
“பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” என்று
வள்ளல் பெருமான் தன் அகவலில் பாடியுள்ளபடி எக்கணத்திலும் அவிழ இருக்கும் இவ்வறிவுக்கு அறிவாய் சிவபெருமான் அதனுடன் சதா நின்று கொண்டு இருக்கிறார்!
அவிழும் இவ் அல்லல்:-
“ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
அவ்வாறு அறிவுக்கு அறிவாய் நம்முள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கும் அவனின் திருவடிகளை உணரப் பெறாதவர்களுக்கு, அறிவானது அவிழாமல் அகத்தினுள்ளேயே ஒடுங்குவதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் இம்மெய்யிலிருந்து கட்டவிழ்ந்து போய் கொண்டேயிருக்கும்!!!

.jpeg)
