LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 29 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்துஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.  காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்:பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று. இவ்வாறு ஒவ்வொரு உருவிலும் “இருக்கு” என்னும் சப்த ஸ்வரூப உணர்வாக, அதனதன் உருவினில் உருவாக, ஆனால் காண்பதற்கு அரிதிலும் அரிதாக  இருக்கும்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 28 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்:நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூத வடிவாகவே இருக்கும் இறைவன,  இம்மானுட தேகத்தில் பஞ்சபூத அம்சங்களையும் முறையாக பொருந்தும் படி இணைத்து அவற்றோடு இணங்கி, அண்டம் பிண்டம் என்று எங்குமாய் இருப்பவன். பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்:  எனினும் அண்டம் பிண்டம் என்னும் இவைகள் அற்ற…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 27 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான் அடிப் புண்ணிய மாமே. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்:மனிதப் பிறவி உருவாக காரணமான ஆதிமூலமான உயிர் வித்தை, குருவருளால் வாசியை திருவாசியாக மாற்றி, அதன் மூலம் இடைவிடாது அவனை தொடர்ந்து நின்று, சிவாசிவா என்று இடைவிடாது அடுத்தடுத்து தொழுது கொண்டிருந்தால், படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்:ஆதிமூலத்தின் உயிர்சக்தி, சிவாசிவா என்னும் திருவாசியின் வழியாக, பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 26 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று:வாசியில் இயங்கும் சூரிய கலையும், சந்திர கலையும்  கூடும் தாமரையை ஒத்த நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் அந்தமில்லா ஈசனை, சூரியனும் சந்திரனும் சந்திக்கும்  அந்தி மாலை பொழுதில், அவ்-ஈசனின் அருள், இத்தேகம் முழுவதும் பரவ வேண்டும் என்னும் பக்தி சிந்தனையோடு, நந்தியை நாளும் வணங்கப்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 25 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.  பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்:பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள். பிறப்பு என்னும் சங்கிலித் தொடரை அழிக்கும் பேரருளாளன்: இறந்தால் மீண்டும் மறுபிறவி உண்டு  என்பது சனாதன தர்மத்தின் நியதி. அவ்வாறாயின் இறப்பில்லா பெருவாழ்வு அடைய பெற்றால்தான் மீண்டும் பிறவாமை என்று பேரு கிட்டும். அத்தகைய மரணமில்லா பெருவாழ்வை…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 24 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ🙏போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்ஆற்றியது தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. மனித வாழ்க்கையில் அனைவருக்கும்  இரண்டுவித பாதைகள் உள்ளன, ஒன்று இறுதியில் மரணத்திற்கு வழிவகுப்பதும், அகலமானதும், எளிதானதும்,  மற்றொன்று மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வழிவகுக்கும் குறுகலானதும், கடினமானதுமாகும். பொதுவாக எல்லா மனிதர்களும் பிறந்தால் இறந்து தான் ஆக வேண்டும் என்பதை ஒரு நியதியாக முழுமையாக ஏற்றுக் கொண்டதால், திருத்தப்படாத வாசியிலேயே, அதாவது வாசி யோகத்தை பற்றி அறியாமல் அகலமான…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்