LATEST POSTS
-
எழுத்தறிவிக்கும் இறைவன்
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக சொல்லப்படுகிறது. தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3 ல், “வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்; சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்; உபதேசம் சந்தியைச் செய்விப்பது” என்பதாக சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபமாக விளங்கும் சிவத்தையே. இதுவே…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 3035 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலவி யவனேஇணரும் அவன்தன்னை என்னலு மாகான்துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே.” உணர்வும் அவனே உயிரும் அவனே:உலகில் உள்ள எண்ணற்ற ஜீவராசிகளில் மனிதப்பிறவி ஒன்றுக்கு மட்டும் தான், தான் கொண்ட மானுட வடிவை உணரும் தன்மை உண்டு. அத்தகைய உணர்வாகி நிற்பவன் ‘ அவனே என்னும் குருவாகி நிற்கும் சிவமே’ஆகும். அவனே அம்மானுட வடிவான உணர்விற்கு ஆதாரமாக விளங்கும் உயிர் வித்தாகவும் இருக்கிறான். புணர்வும் அவனே…
-
“இணைப்பின் கடவுளான ஸ்ரீ ஹனுமான்”
“இணைப்பின் கடவுளான ஸ்ரீ ஹனுமான்”.ஒன்றாக இருந்து இரண்டெனப் பிரிந்ததை மீண்டும் தன் யோக சக்தியால் ஒன்றென இணைக்கும் வல்லமை கொண்டவர் ஸ்ரீ ஹனுமான். பிராண வாயுவுக்கும் சரீரத்துக்கும் இடையில் சுவாசிப்பவராக நின்று ஒவ்வொருவரின் தேகம் இயங்க காரணமாக இருப்பவர் ஸ்ரீ ஹனுமான். வாயுபுத்திரனான ஹனுமானை இவ்வாறு ஒருவர் தன்னுடைய வெளிமூச்சிலும், உள்மூச்சிலும் முறையாக பொருத்தி, இடைவிடாது சிந்தித்துக் கொண்டே இருந்தால், அவரின் யோக சக்தியால் இறுதி காலத்தில் பிராண வாயு உடலை விட்டு வெளியேறாமல் காப்பாற்றப்பட்டு, உடலிலேயே…
-
“The Spiritual Yoga”
“The Spiritual Yoga”Nisargadatta Maharaj says in his book I Am That, Ch. 54, “Yoga is bending the outer to the inner.” Make your mind and body express the real, which is all and beyond all. By doing so, you succeed, not by arguing.” Naturally, every human body possesses the ability to reveal only the truth.…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2840 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்கருவன்றியே நின்று தான் கருவாகும்அருவன்றியே நின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே” உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்:..தோன்றா நிலையில், உருவாகாமலேயே நின்று கொண்டிருந்த உயிர் வித்தான விந்தணு, ஆண் பெண் என்னும் இரு உருவங்களும் புணர்க்கும் அதாவது இணையும் போது… கருவன்றியே நின்று தான் கருவாகும்:பூ கர்பாய நமஹ ! என்பது பரம்பொருளை போற்றித் துதிக்கும் ஒரு ஸ்லோகம். அதாவது தோன்றா நிலையில், கருவன்றியே நின்று…
-
திருவெம்பாவை-8
“ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” இது மாணிக்கவாச பெருமாள் அருளிய திருவெம்பாவை பாடலின் (எட்டாம் பாடல்) ஒரு பகுதியாகும், ஒவ்வொருவரின் மரண காலத்தில் சளியானது, அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளபடி, பச்சைப்புயல் போன்று உருவாகி மூச்சை அடைப்பது, இது, சுவாசக் கோளாறுகளின் இறுதி நிலை. இதையே மாணிக்கவாசகர் ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள ஊழி என்றும் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய ஊழி காலத்தில் அதுவரை ஒருவரிடம் பற்று கொண்ட அனைத்தும் தாம் பற்றிய பற்றை விட்டுவிட, அவ்- ஊழியில் முதல்வனாய்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

