LATEST POSTS
-
“புத்திமான் பலவான் ஆவான்”
புத்திமான் பலவான் ஆவான் “கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு“. குறள் 631 ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் அமைச்சு என்னும் பதத்திற்கு ஒரு நாட்டின் அரசரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் என்று பொருள் கொள்ளுவதைவிட இம்மானுட தேகத்தில் வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கும் அவரவர் புத்தியையே அமைச்சு…
-
You Are That!- “The eighth attributes”
வாலி–காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் வடிவான அஹங்காரதின் மொத்த பிரதிபலிப்பு. வாலியை யாரும் வெல்லமுடியாது, ஏனெனில் வாலியின் முன் யார் வந்து நின்றாலும் அவர்களின் பலத்தின் பாதி இயல்பாகவே வாலியை வந்தடையும். குணங்களுக்கு குணங்களே எதிரிகள். குணங்களால் குணங்களை வெல்லமுடியாது. (குரோதத்தை குரோதத்தால் வெல்லாமுடியாது). மாறாக அக்குணங்கள் மிகையாகுமேயன்றி, அழிவு என்பது ஒருக்காலும் ஏற்படாது. அப்படிப்பட்ட வாலியை வெல்லக்கூடிய சக்தி ஏழு குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான, ”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.” பொதுப்பொருள்: எண்…
-
You Are That!- “Loved by all”
“சர்வே ஜன: சுகினோ பவந்து“ ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” தாயுமானவர் “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு“. குறள் 72: அன்புடைமை அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்பது பொதுப் பொருள்.. இதில் வள்ளுவர் குறிப்பிடும் அன்பு எனப்படுவது “சர்வே ஜன: சுகினோ பவந்து“ என்னும் பொருள் கொண்ட தெய்வாம்சம் பொருந்திய குணம். அது…
-
You Are That!- “The sense controller”
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்”. குறள் 260: புலான்மறுத்தல் இக்குறளுக்கு கூறும் பொது விளக்கம்:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதாகும். அப்படியாயின் ஷரிடிசாய்பாபா போன்ற மகான்கள் அவர்கள் தாம்வாழ்ந்த காலங்களில் புலால் உண்பவராகத்தான் இருந்திருக்கிறார்.ஆனால் இன்று உலகமே அவரை கைகூப்பி தொழுகின்றதே !!! உண்மையில் வள்ளுவர் கூறும் புலான் மறுத்தல் என்பது ?கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,சுலோகம்-11ல்“உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.என்று…
-
You Are That!- “witnesser”
Hari Sarvothama! Vayu Jeevothama! “ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”. ஏதிலார் என்னும் பதத்திற்கு அயலார் என்று பொருள். அயலாருடைய குற்றம் என்று வரும் பொழுது அது குற்றம், மற்றும் குற்றம்புரிந்தவன், சாஷி என வகைபடுத்தப்படுகிறது. அதேபோல் எவனொருவன் “ ஏதிலார் குற்றம்போல் தங்குற்றத்தையும் “ அதாவது தாம் செய்யும் அல்லது செய்த குற்றத்துக்கும் சாஷி உள்ளது என்று உணர்வானாகில்,ஏனெனில் ஒருவரும் அறிகிலார் என்னும் எண்ணமே ஒருவரை மேன்மேலும் குற்றம் செய்ய தூண்டுகின்றது….…
-
You Are That!-” cheerful giver “
“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல்” – குறள் 1005 பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை என்பது இக்குறளின் பொதுப்பொருள்.. “சுகத்திலிருந்து ஸ்ரத்தை உண்டாகின்றது என்பது உபநிஷத் வாக்கு“. இதில் வள்ளுவர் குறிப்பிடும் இன்பம் என்பது பொதுவான, இயல்பான,தெய்வத்தன்மை கொண்ட குணமாகும். இவ் இன்பத்தை துய்க்காத (மாறுபட்ட அளவு முறையில் ) உயிர்கள் இப்பூவுலகில் இருக்கவே இருக்காது. சத்வம்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

