LATEST POSTS


  • You Are That!- “Accepter as God’s gift”

    “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்“. ஒருவர் தனக்கு கிடைக்கப்பட்டது எதுவாயினும்அது இறைவனால் அருளப்பட்டதே என்னும் மனப்பாங்கோடு வாழ்வாராயின் அவருக்கு எத்தகைய துன்பமான சூழ்நிலைகள்உருவாயினும்….. உதாரணமாக அவர்வறுமை என்னும் கொடிய நோயினால் தாக்கப்பட்டாலும் எதையும்மகிழ்வுடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டுள்ளமையால் அச்சூழலிலும் திருப்தியுடனேவாழ்வர். இத்தகையோரினால் வறுமை வறுமையுற்று துன்பப்படும்.அதாவது வறுமை என்னும் சொல்லே அவர்களது அகராதியில் இல்லாமல் போய்விடும். குறிப்பாக இப்படிப்பட்டவர்கள் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மை அற்றவராய்த்தான் இருப்பர்.ஏனினில் இவர்களது வறுமை நீங்கி செல்வம்வரினும் மனப்பாங்கில் எந்த மாற்றமும் இல்லாமல்…

    Read more

  • You Are That!- “knower of the hearts “

      “ஒருவர் பொறை இருவர் நட்பு”  “முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்”. முகத்தால் விரும்பி– இனிமையுடன் நோக்கி– உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். பரஸ்பரம் அன்பு பரிமாறிக்கொள்ளும் இருவரில்,ஒருவர் தன் அன்புக்கு பாத்திரமானவரின் முகத்தை தம் அகத்துனுள் அமர்த்தி, ஒரு முகப்பட்ட உள்ளத்துடன் இனிமையாக அம்முகத்தை நோக்கி, தம் எண்ணங்களால் வெளிப்படுத்தும் இன் சொல்லானது… அத்தகைய அன்பிற்க்குரியவர் எத்துனை வெகு தூரத்தில், கடல் கடந்து இருந்தாலும்…

    Read more

  • You Are That!- “having no expectations”

    “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு”. இக் குறளில் மேலோட்டமாக பார்த்தால் வானம் பொழியும் மாரிக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்னும் பொருளாக  தோன்றும். அவ்வாறெனின், “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்று அவ்வையாரின் மூதுரை இவ்வாறு கூறுவானேன் ? இதிலிருந்து இப்பூவுலகில் மானுடப்பிறப்பு எடுத்த அனைவருடைய கடமையும் (கடப்பாடு…

    Read more

  • You Are That!- “knower of uncertainty”

    “அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள். “ஆவ தறிவார்” என்னும் பதத்திற்கு எந்த ஒரு செயல்பாடு ஆகியே தீருமோ, எக்காலத்தும் எவராலும் மாற்ற இயலாத ஒன்றாய் உள்ளது அதுவேயாகும்! அத்தகைய செயல் என்பது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சென்றடைய வேண்டிய இறப்பு என்னும் நியதியே ஆகும். அறிவுடையார் இவ் நியதி ஆகியே தீரும் என்பதை…

    Read more

  • You Are That!- “knower of capability”

    “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி  இடைக்கண் முரிந்தார் பலர்”. தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்பது இக்குறளின் பொதுபொருள். வலிமை என்பது தேகத்தினின்றும், ஊக்கம் என்பது அத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிரினின்றும் வெளிப்படுவது. “உடைத்தம்” –உடை என்னும் சொல் ஆடையை குறிக்கும். உடைத்தம் –தம்முடைய ஆடையாக இருக்கும் உடம்பு. அதாவது தம் உயிருக்கு ஆடையாக இருக்கும் உடம்பு. ஊக்கம் என்பது உயிரினில் உருவாகும் ஒரு…

    Read more

  • You Are That!- “glorifier”

    “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்”. ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள். வள்ளுவர் இங்கு தினைத்துணை உதவி என்றில்லாமல் தினைத்துணை நன்றி என்றே குறிப்பிடுகிறார். மேலும் இங்கு உவமானப் பொருளாக பனையினை சுட்டிக்காண்பிப்பதின் மூலம் இன் நன்றி செய்யக் காரணமான உதவியானது பனையளவு பெரிது என்பதும் பொருளாகின்றது. பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்