LATEST POSTS


  • You Are That!- “Faithful in the eyes”

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்– வள்ளல் பெருமான் “கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” (அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1100) பொழிப்பு: கண்களோடு கண்கள் இணைந்து நோக்கால் ஒத்திருந்தால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லை என்பது பொது பொருள். இதை வள்ளல் பெருமான் பாடலுடன் பொருள்படுத்தி பார்க்கலாம் பொதுவாக இருவர் சந்தித்துக் கொள்ளும் போது அவரவர் மனதினில் தோன்றும் நினைவுகள் வாய்ச்…

    Read more

  • You Are That!- “Preventer of death”

    “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்“. நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும். மனித உடலில் 4448 நோய்கள்  வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். இவற்றில் எந்த நோய்க்கு   அது வரும்முன் மருத்துவரை சென்று நாடுவது ? நோய்நாடி:  மனிதனாக பிறப்பெடுத்த எத்தகையவரையும் நாடியே தீரும் நோய் மரணம் என்னும் நோயே ஆகும். எனவே மரணம் என்னும் நோயை அது நம்மை…

    Read more

  • You Are That!- “light body”

     “யாமெய்யாக்  கண்டவற்றுள்  இல்லை எனைத்தொன்றும்      வாய்மையின்  நல்ல  பிற”   அறத்துப்பால்:வாய்மை. யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை என்பது பொதுப்பொருள். “மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைத்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைத்தது பார்முதல் பூதம்“ என்பது திருமந்திரசொல். இதன் விளக்கம்:  எவ்வாறு மரத்தினால்  செய்யப்பட்ட பதுமையானது ஒளிகுறைவின் (அரையிருளில்) காரணம், மாமதயானையாகதோன்றுகிறதோ, அவ்வாறே பரம்பொருள் சொரூபமாக “மானூடர் யாக்கைவடிவு சதாசிவம்” என…

    Read more

  • You Are That!- “maker of falsehood to real”

    “நிற்க கற்றல் சொல் திறம்பாமை”- கொன்றை வேந்தன்:50“ “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின்“. குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இங்கு “நன்மை பயக்கும் எனின்“ என்று வள்ளுவர் குறிப்பிடுவதை, யார் பொய்யுரத்தாலும்  அது நன்மையையே விளைவிக்கும் என்பதாக பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக எவரொருவர் தம் வாழ்நாள்முழுவதும் வாய்மையை எத்துனை இடர்பாடுகள் நேரிடினும், அதனின்நின்று ஒரு சிறிதும் பிறழாமல், வாய்மையை தன் உயிர் மூச்சாகவே கடைபிடித்து…

    Read more

  • You Are That!- “thankfulness glorifier”

    “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். ஆனால் வள்ளுவர் இக்குறளில் உதவி என்று குறிப்பிடாமல் “காலத்தி னாற்செய்த நன்றி” என்றே குறிப்பிடுகிறார் அது எவ்வாறு ? வள்ளுவர் குறிப்பிடும் காலம் என்னும் தக்கதருணம் அவ்வுதவியை பெற்றவற்கே பொருந்தும். மேலும் அத்தகைய தருணமும் வாழ்வில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழக்கூடியதாக இருக்கும்.அத்தகைய…

    Read more

  • You Are That!- “An impartial arbitrator”

    “தகுதி எனவொன்று நன்றே பகுதியால்  பாற்பட்டு ஒழுகப் பெறின்.”  குறள்-111 அருட்ப்ரகாச வள்ளலாரின் பாடல்  (பாடல் எண் :4128) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே. காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. இதில் வள்ளுவர் கூறும் “தகுதி எனவொன்று” உள்ளது என்பதும்  வள்ளலார்கூறும் “எல்லார்க்கும் பொதுவில் நடம்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்