LATEST POSTS


  • You Are That! – “SadhGuru’s Voice”

    பிருஹதாரணியகோபநிஷத்து: (கார்க்கி யாஜ்ஞவல்கியர் ஸம்பாஷணை ஆரம்பம்) 3:8.6.”எது வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ அது எதில் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டுள்ளது?” என்று கார்க்கி அம்மையார் கேட்டாள். 3:8.7. “ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளது. ” எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டிருக்கிறது ?” 3:8.8. ” கார்க்கி! பிரம்மஞானிகள் அதை அக்ஷரம் (அழிவற்றது) எனக் கூறுகிறார்கள். அது ஸ்தூலமுமன்று, ஸூக்ஷமமும் அன்று…

    Read more

  • You Are That! – “Real-time handler”

    “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்:941) பொதுப்பொருள்: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். மெய்ப்பொருள்: வளி: என்பதிற்கு ‘காற்று மற்றும் கால அளவு வகை’ என்று பொருள்கள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்:5.6. திஸ்ரோ. மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்ய- ஸக்தா…

    Read more

  • You Are That! – “Knowledge to knowledge”

    “தெருள்நிலைஇது எனத்தெருட்டி என்னுளத்திருந்து அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:321) தெருள்நிலை: என்பதிற்கு ‘அறிவின்தெளிவு நிலை’ என்று பொருள். தெருட்டி: என்பதிற்கு ‘அறிவித்தல்’ என்று பொருள். எவரொருவரும் தம் பெற்ற அறிவின் தெளிவு நிலையினை ‘எழுத்து, சொல் மற்றும் செயல் வடிவு’ மூலமாக புற உலகுக்கு வெளிப்படுத்தியே, தம் பெற்ற அறிவின்தெளிவு நிலைக்கு ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள இயலும். ஆனால் இங்கு வள்ளல் பெருமானின் அறிவுக்கு அறிவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி, வள்ளல் பெருமான் தாம்பெற்ற அறிவின் தெளிவு நிலைக்கு…

    Read more

  • You Are That! – “Non-stop runner”

    “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து”.(குறள்:496) பொதுப்பொருள்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. மெய்ப்பொருள்: வள்ளுவர் பெருமான் இங்கு கப்பல், தேர் என்னும் இரண்டையுமே ஏன் உவமானப் பொருளாகவே கையாண்டுள்ளார் ? நாம் வாழும் இந்த பூமி முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தாலும் சூழ்ந்து உள்ளது. அதே போல் ஒவ்வொரு மனித உடலும் முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தின்…

    Read more

  • You Are That! – “Mighty person”

    “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல. இல்லாகித் தோன்றாக் கெடும்”. குறள் 479:பொருட்பால்: வலியறிதல்: பொதுப்பொருள்: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். மெய்ப்பொருள்: ‘மாயை’ என்பது இல்லாததை இருப்பது போல தோன்ற வைத்துக் கெடுப்பதே ஆகும். ‘அளவு’ என்பதிற்கு ‘ஞானம் மற்றும் தன்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘ஞானம்’ உள்ளவர்கள் இம் மாயையின் தன்மையை…

    Read more

  • You Are That! – “Fearless Explicit”

    “எச்சம் நினைக்கிலை எல்லாம் பெறுகஎன்று. அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி”. (அகவல்:233) ‘எச்சம்’ என்பது ஒன்றை ‘சொல்லி மற்றொன்றை மறைப்பது’ அல்லது ‘ஒன்றை கொடுத்து மற்றொன்றை இல்லை’ என்றும் பகர்வது. ‘அச்சம்’ பொருட்டு இத்தகைய ‘எச்சம்’ என்னும் தன்மை ஒவ்வொரு மனித உள்ளத்துடன் கலந்தே உள்ளதால், எவர் ஒருவராலும் எவரொருவருடனும் இணைவது என்பது இயலவே இயலாத ஒன்று. ஆனால் இங்கு ‘எச்சம்’ என்னும் தன்மை நினைவிலேயே ஒருபோதும் இல்லாமல், வள்ளல் பெருமானுடன் ‘இசைந்த’ அருட்பெருஞ்ஜோதியிடம் உள்ள அனைத்தும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்