
தூய இருப்பின் பண்பு எது?
மெய், வாய், கண், செவி, நாசி, என்னும் ஐம்புலன்களை உள்ளடக்கிய உருவம் உணர்வுகளாக வெளிப்படுவதில்லை ஆனால் உருவம் இருக்கிறது.
பிராணன்கள் மூச்சுக் காற்றாக வெளிப்படுவதில்லை ஆனால் பிராணங்கள் இருக்கிறது.
மனம் சிந்தனையாக வெளிப்படுவதில்லை ஆனால் மனம் இருக்கிறது.
அறிவு அறியப்படும் பொருளாக வெளிப்படுவதில்லை ஆனால் அறிவு இருக்கிறது.
ஆனந்தம் அனுபவிப்பவனாக வெளிப்படுவதில்லை ஆனால் ஆனந்தம் இருக்கிறது.
நான் தனிப்பட்ட அகங்காரமாக வெளிப்படுவதில்லை ஆனால் நான் இருக்கிறது.
பிரபஞ்சம் காட்சியாக வெளிப்படுவதில்லை. ஆனால் பிரபஞ்சம் இருக்கிறது.
சப்தம் சொல்லாக வெளிப்படுவதில்லை. ஆனால் சப்தம் இருக்கிறது.
ஒளி இருளை அகற்றுவதாக வெளிப்படுவதில்லை. ஆனால் ஒளி ஒளிர்கிறது.
ஆற்றல் ஆற்றல்களாக வெளிப்படுவதில்லை ஆனால் ஆற்றல் இருக்கிறது.
அதாவது, “தூய இருப்பு வெளிப்படுவதில்லை; அதன் இருப்பிலிருந்தே அனைத்துப் வெளிப்பாடுகளும் தோன்றுகின்றன.”
இதுவே தூய இருப்பின் பண்பு எனக் கொள்ளலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

