திருக்குறள் : 420..பொருட்பால்.. அதிகாரம் 42.. கேள்வி

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்”.


பொருள்:
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.


மெய்ப்பொருள்:
ஒருவர் வாயில் சுவை உணர்வை உணருவதற்கு நாக்கு என்னும் உறுப்பு உள்ளது. நாக்கினில் உணர்ச்சி நரம்புகள் இல்லை என்றால் உண்பவர் வாயில் சுவை ஏற்படாது.
அதுபோன்று ஒருவர் செவியால் கேள்விச் சுவையை உணர்வதற்கு உறுப்பாகப் பயன்படுவது அவரவர்களது மெய் என்னும் உடல்/உள்ளுணர்வு சார்ந்த கருவி எனலாம். மெய்மறந்த நிலை என்பது ஒருவருக்கு உருவாகுவது செவி வழியே வெறும் ஒலியைக் கேட்பதல்ல—கேட்கப்படும் “உண்மையின் ஒலி ஒருவரின் மெய்யுணர்வைத் தொடும்போது ஏற்படும் உள்ளார்ந்த விழிப்பாகும். அந்த “செவிச்சுவையை” அறியாத வாழ்க்கை, உடல் உயிரோடு இருந்தாலும் உயிரின் உண்மையான பயனை அடையாத வாழ்க்கையாகிறது.


“இத்தகைய மெய்யுணர்வைத் தரக்கூடிய செவிச்சுவையை உணராமல், வெறும் வாயின் சுவையுணர்வு மட்டுமே உடைய மக்களின் வாழ்க்கை, அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்ன, இறந்தாலும் என்ன?”


வாழ்க தமிழ் 🙏 வாழ்க வள்ளுவம் 🙏

Leave a comment