
குருவே சிவம்
நீ இருப்பதாக நானும்,
நான் இருப்பதாக நீயும்,
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டிருப்பதும்…
நாம் இருப்பதால் உலகமும்,
உலகங்கள் இருப்பதால் நாமும்
இருப்பதாக உணர்ந்து கொண்டிருப்பதும்…
நாமும் இந்த உலகங்களும் அடங்கிய இப்பெரும் படைப்புகள் இருப்பதால் இறைவனும்,
இறைவன் இருப்பதால் இப்பெரும் படைப்புகளும் விளங்குவதாக உணர்ந்து கொண்டிருப்பதும்…
இவை அனைத்தும் மாயையே.
“சுத்திமுக்திகா நியா”(சிப்பி-வெள்ளி மாயை)
எவ்வாறு கடற்கரையில் கிடக்கும் ஒரு கிளிஞ்சல் மீது சூரிய ஒளி பட்டு, அது வெள்ளி போல் மின்னுகின்றதோ, அவ்வாறே ஆன்மாவின் ஒரே பிரகாசத்தால் இவை அனைத்தும் ஒரே சமயத்தில் மாயக் காட்சிகளாக வெளிப்படுகின்றன.
எவ்வாறு சூரிய ஒளியின் உண்மை உணரப்படும் போது, கிளிஞ்சலின் மீது தோன்றிய வெள்ளியின் தோற்றம் அக்கணமே மறைந்து போகிறதோ…
அவ்வாறே ஆன்மாவின் பிரகாசம் குரு அருளால் உணரப்படும் போது, அந்தப் பிரகாசத்தின் மீதே தோன்றிய இம்மாயக் காட்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மறைந்து போய்விடுகின்றன.
ஆன்மப் பிரகாசமே குரு.
ஆன்மப் பிரகாசமே சிவம்.
குருவே சிவம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

