விதியின் பிடியில் மூத்த குடிமக்கள்:

  விதியின் பிடியில் மூத்த குடிமக்கள்:
பெரும்பான்மையானோர் முதுமை எட்டியதும், “பிறந்தால் இறப்பு உறுதி” என்ற விதியை மட்டுமே எண்ணி, தங்களின் உடல்ரீதியான முடிவை எதிர்நோக்கி அச்சத்திலோ, விரக்திலோ அல்லது சோர்விலோ காத்திருக்கிறார்கள்.

மறுபிறப்பின் அறியாமை:
அடுத்த பிறப்பு எத்தகையதாக இருக்கும் என்ற தெளிவின்மை ஒருபுறம் இருக்க, “சாகாமை” (மரணம் இல்லா பெருவாழ்வு / முக்தி) என்னும் உயர்ந்த நிலையை அடைய முயலும் ஆர்வம் பெரும்பாலோரிடம் காணப்படுவதில்லை.

அரிய மனிதப் பிறவி:
எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில், ஆன்மீக விடுதலைக்காகத் தன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடிய தனிப்பெரும் வாய்ப்பு மனிதப் பிறவிக்கு மட்டுமே உண்டு.

மாயையின் சக்தி:
இத்தகைய அரிய வாய்ப்பிருந்தும், உலகியல் மாயையில் சிக்கி அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவது இறைவனின் அருளறியா “மருள் நிலை” (மயக்க நிலை) அன்றி வேறென்ன?

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, இம்மனித வாழ்வைப் பெற்ற நாம், வெறும் பிறப்பு இறப்பு என்ற வட்டத்திற்குள் சுழன்று அழியாமல், அதன் உண்மையான நோக்கமான “சாகாமை என்னும் தன்மையின் மார்க்கத்தை” (மெய்ஞானத்தை) தேடுவதுதான் இந்த வாழ்வின் பேறு.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

____________________________________________

Senior Citizens in the Grip of Destiny
The Grip of Destiny:
When most people reach old age, they focus only on the belief that “If one is born, death is certain.” They then wait for the physical end of their lives, often in fear, despair, or resignation.

The Uncertainty of Rebirth:
Alongside the uncertainty of what their next birth might be, there is, for many, little interest in seeking the higher state known as “deathlessness”—the attainment of an immortal state of existence, or liberation (Mukti).

The Rare Human Birth:
Among the 8.4 million forms of living beings, human birth alone offers the unique opportunity to consciously choose and pursue the path toward spiritual liberation.

The Power of Maya:
Even after receiving such a rare opportunity, to become trapped in worldly Maya and fail to make use of it—what else could this be but a state of “Marul Nilai,” a state of delusion in which one remains unaware of Divine Grace?

As Thiruvalluvar says,
“If you are born, be born with excellence and fame;
Otherwise, it is better not to be born.”
In accordance with these words of Valluvar, having received this precious human life, our true fortune is not to merely revolve endlessly within the cycle of birth and death, only to perish.

Rather, it is to seek the path to “”deathlessness”—the state beyond death, the path of true spiritual wisdom and liberation.
Sri Gurubhyo Namaha 🙏

________________________________________________________________________

கவிதையின் தலைப்பு: அருள் அறியா மருள் நிலை:
பிறந்தோம்; இறப்போம்; இதுதான் விதி!
என்றே எண்ணி ஏங்கித் தவிக்கும்
மூத்தோர் கூட்டம் உலகினில் உண்டு;
முடிவை எதிர்நோக்கி முடங்கிடு கிறது!

மறுபிறவி உண்டு என்றே உரைப்பார்,
எந்த வடிவில் எங்கு பிறப்போம்?
தெளிவும் இல்லை; தேடலும் இல்லை;

சாகாமை என்னும் மார்க்கம் அறியார்!
எண்பத்து நான்காம் லட்சம் யோனியில்
உயர்ந்த இப்பிறவி மனிதப் பிறவி!

விருப்பத் தேர்வாய் விதியை வெல்லும்
பேருயிர்ச் சுதந்திரம் இறைவளித்தானே!

அந்தோ! இந்த அற்புதப் பெரும்பயனை
அறியா துலகில் அயர்ந்து கிடப்போரை,

மாயையின் வீச்சில் மயங்கியவர் என்பதா?

அன்றி, அருள் அறியா மருள் நிலையர் என்பதா?