“வைத்தியநாத மருந்து’

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.”
— திருக்குறள் 950 | பொருட்பால் | அதிகாரம்: மருந்து
“வள்ளுவர் கூறும் இந்தக் குறளை, மெய்ப்பொருள் நோக்கில் காணும்போது, இது ஒரு ஆழமான ஆன்மிக மருத்துவ முறையை வெளிப்படுத்துகிறது.”
உற்றவன் — இதற்கு சாதாரண நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை குறிப்பதாக பொருள் கொள்ளாமல், பிறவிப்பிணி என்னும் நோயால் பாதிக்கப்பட்டவனை குறிப்பதாக பொருள் கொள்ளலாம்.
தீர்ப்பான் — அந்தப் பிறவிப்பிணியைத் தீர்க்கும் ஞான வைத்தியன் — வைத்தியநாதன்.
மருந்து — பிறவிப்பிணியை நீக்கும், திருஞானசம்பந்தப் பெருமான் பதிகங்களில் போற்றப்படும் மந்திரமாகவும், மாமருந்தாகவும் விளங்கும் நீறு.
உழைச் செல்வான் — அருகிலிருந்து அந்த மாமருந்தை வழங்கி, மெய்ஞானப் பாதையில் வழிநடத்திச் செல்பவன்.
இந்த நான்கும் இணைந்ததே பிறவிப்பிணியை ஒழிக்கும் ஆன்மிக மருத்துவ முறை.
இந்த ஆன்மிக மருத்துவத்தின் சாரத்தையே வள்ளல் பெருமான்,
“நல்ல மருந்திம் மருந்து —
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து.” என்று பாடியுள்ளார்.
வாழ்க வள்ளுவம்! 🙏வாழ்க தமிழ்! 🙏

