
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரின் ஆன்மீக வரலாறுகளின் ஒப்பீடு
“கி.பி. 7–8ஆம் நூற்றாண்டுகளில் உலகின் இரண்டு பகுதிகளில் இரண்டு மாபெரும் ஆன்மிக இயக்கங்கள் தோன்றின. இந்தியாவில் Adi Shankaracharya அத்வைதத்தின் மூலம் நிர்குண பிரம்மத்தை வலியுறுத்தினார். அரேபியாவில் Prophet Muhammad ஒரே உருவமற்ற இறைவன் என்ற தவ்ஹீத் கொள்கையை நிறுவினார். இரண்டிலும் உருவமற்ற பரம்பொருள் என்ற ஒற்றுமை காணப்பட்டாலும், இறைவன்–மனிதன் உறவு மற்றும் மோட்சம் பற்றிய தத்துவங்களில் வேறுபாடுகள் இருந்தன. இருந்தபோதிலும், உருவ வழிபாட்டிலிருந்து உருவமற்ற பரம்பொருளை நோக்கி மனித சிந்தனையை உயர்த்த முயன்ற மார்க்கங்கள் என்ற கோணத்தில் இவற்றை ஒப்பிட்டு ஆராயலாம்.”
அரேபிய தேசத்திலும் நபிகள் நாயகம் தோன்றுவதற்கு முன்பு, வேதகால மரபுகள் கடைபிடிக்கப்பட்டதாக தினமணி ஆசிரியர் சிவராமன் என்பவரின் ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நபிகள் நாயகம் தோன்றுவதற்கு முன்பு அங்கும் எழுபத்தி இரண்டு வகையான மதங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அதே போன்று பாரத தேசத்திலும் ஆதிசங்கரர் தோன்றுவதற்கு முன்பு இருந்த வேதகால மரபுகளில் எழுபத்தி இரண்டு வகையான மதங்கள் இங்கும் இருந்ததாக, தெய்வத்தின் குரலில் காஞ்சி பெரியவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இறைவன் ஒருவனே, அவன் உருவமற்றவனாக, தூய விழிப்புணர்வாக ஒவ்வொருவரின் அகமும் புறமும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற நிர்குண பிரம்ம தத்துவத்தை இருவருமே நிலைநாட்ட முயன்றுள்ளனர்.
அரேபிய தேசத்தில் நபிகள் நாயகத்தால் தோற்றுவிக்கப்பட்ட நிர்குண பிரம்ம உபாசனை, அனுபவிக்க வேண்டிய உண்மையாக மட்டுமில்லாமல், அது வழிபாட்டுக்குரிய பொருளாக கட்டாயமாக்கப்பட்டதால், அங்கு அது வெற்றி அடைந்து பின் எங்கும் இன்றளவும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஸ்ரீ ஆதிசங்கரரின் நிர்குண பிரம்ம தத்துவம் , ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்கள் மூலம் அந்தந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் சென்றடையாததின் காரணம், அத்வைதத்தின் நிர்குண பிரம்ம தத்துவம் பொதுமக்களின் ஆன்மிகப் பயிற்சியாக வளரவில்லை; அதாவது நிர்குண பிரம்மத்தின் இயல்பான Pure Consciousness” என்பது வழிபாட்டிற்குரிய பொருளாக மாறாமல், ஒரு சிலரால் மட்டுமே அனுபவிக்க வேண்டிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக சகுண பக்தி மரபுகளே சமூகத்தில் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டு செல்வாக்கைப் பெற்றன.
நிர்ண பிரம்ம வழிபாடு என்பது மட்டும் ஶ்ரீ ஆதிசங்கரரின் காலம் தொட்டே கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், உலகம் முழுவதும் அவரின் அத்வைத தத்துவம் பரவி இருந்திருக்கும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

