“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”

“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”
ஸத்குருவும், ஒரு உண்மையுள்ள சீடனும் உண்மையில் தனித்தனி நபர்கள் அல்ல!  அதுபோன்றே ஸத்குருவும், அந்தர்யாமியும் வெவ்வேறு அல்ல ஒன்றே!

பிருஹதாரண்யக உபநிஷதம் 3.7.3 இல், ரிஷி யாக்ஞவல்கியர் அந்தர்யாமியை பற்றி இவ்வாறு கூறுகிறார். “எவர் பூமியில்(நிலத்தில்) இருந்து கொண்டு பூமியில் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்,”என்று.

ஒவ்வொரு மனிதர்களின் தேகமும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், என்னும் பஞ்சபூத அம்சங்களை கொண்டுள்ளதால்,  பூமிக்கு சொல்லப்பட்ட இதே தத்துவத்தை  ரிஷி யாக்ஞவல்கியர் இதே பிருஹதாரண்யக உபநிஷதம் வழியாக, மற்ற எல்லா பூதங்களுக்கும், இப் பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள சூரியன், சந்திரன் போன்ற எல்லா கிரகங்களுக்கும்,  மற்றும் நட்சத்திரங்களுக்கும், அதுபோன்றே பிரபஞ்சத்தின் சாரமாக வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு மனித தேகத்திற்கும், அதுபோன்றே ஒவ்வொரு மனித உருவிலும் அடங்க பெற்ற மெய், வாய், கண், செவி, நாசி, என்னும் ஐம் புலன்களின் வழியாக வெளிப்படும் உணர்ச்சி, வாக்கு, பார்வை, கேட்டல், நுகர்தல், என்னும் ஐம்பொறிகளுக்கும், மற்றும் மனம், புத்தி, அகங்காரம் போன்ற இவைகளுக்கும், மற்றும் அனைத்திற்கும்,  இதே பூமியின் தத்துவத்தை பொருத்தி, ரிஷி யாக்ஞவல்கியர் அந்தர்யாமியை பற்றி நமக்கு உபதேசித்துள்ளார்.

அவ்வகையில் ஸத்குருவை அந்தர்யாமியாக,  தம்முள் உணரப்பட்ட உண்மையுள்ள சீடனுக்கு வேறாக, அதாவது தனிநபராக ஸத்குருவும் இல்லை, அவ்வாறே  ஸத்குருவுக்கும்  வேறாக தனிநபராக சீடனும் இல்லை.

அதுபோன்றே பைபிளில் யோவான் 14.10 ல்,  இயேசு கிறிஸ்து “நான் பிதாவிலும், பிதா என்னிலுமாக இருப்பதைப் பற்றியும், மேலும் யோவான் 10.30.31 ல்,  நானும், பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றும் தம் சீடர்களுக்கு உபதேசத்துள்ளார்.

இஸ்லாமிய சூஃபித்துவ வழக்காறுகளில் மிகப்பிரபலமான ஒரு அரபுப் பொன்மொழி உண்டு:
“மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு”
(من عرف نفسه فقد عرف ربه)
பொருள்: “யார் தன் ஆன்மாவை (தன்னை) அறிந்தாரோ, அவர் நிச்சயமாகத் தன் இறைவனை அறிந்தவராவார்.”

ஆக ஸத்குருவும், ஒரு உண்மையுள்ள சீடனும், அல்லது இறைவனும், அவன் மீது முழு நம்பிக்கை கொண்டவனும், தனித்தனி நபர்கள் கொண்ட “இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
_______________________________________________

Chatgpt ன் பின்னூட்டம் இப்பதிவை பற்றி:
உங்கள் கட்டுரை பல்வேறு ஆன்மீக மரபுகளில் காணப்படும் “உள்ளுறை ஒன்றுமை” (Inner Unity) என்னும் கருத்தை அழகாக இணைக்கிறது.

உபநிஷதங்களில், குறிப்பாக Brihadaranyaka Upanishad-இன் அந்தர்யாமி பிராமணத்தில், எல்லாவற்றிற்குள்ளும் இருந்து அனைத்தையும் ஆளும் அந்தர்யாமி பற்றிய உபதேசம் இடம்பெறுகிறது. ரிஷி Yajnavalkya விளக்கும் இந்தத் தத்துவம், பரம்பொருள் ஒரு வெளிப்புற சக்தி மட்டுமல்ல; உயிரின் உள்ளார்ந்த ஆதாரமும் ஆகும் என்பதை உணர்த்துகிறது.

அதேபோல், Gospel of John-இல் Jesus Christ, “நான் பிதாவிலும், பிதா என்னிலுமாக இருக்கிறார்” என்றும், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றும் கூறுவது, பிரிவைக் கடந்து நிற்கும் ஆன்மீக ஐக்கியத்தைச் சுட்டுகிறது.

சூஃபி மரபில் பரவலாக அறியப்படும்:
> “மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு”
“தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்”
என்ற பொன்மொழியும் இதே அனுபவ உண்மையை நோக்கிச் செல்கிறது. இது ஒரு ஹதீஸ் என்று உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், சூஃபி ஞான மரபில் ஆழ்ந்த ஆன்மீகப் பொருளுடன் மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் முடிவுரை:
> “ஸத்குருவும், உண்மையுள்ள சீடனும் இரண்டல்ல;
இறைவனும், அவனை முழுமையாக சரணடைந்தவனும் இரண்டல்ல;
இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே.”

என்பது அத்வைத வேதாந்தம், பக்தி மரபு, சூஃபி ஞானம் மற்றும் கிறிஸ்தவ மறையியல் (Mysticism) ஆகியவற்றில் ஒலிக்கும் ஒரே மைய அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

ஆனால் தத்துவ ரீதியாக ஒரு நுண்ணிய வேறுபாட்டையும் நினைவில் கொள்ளலாம்: அனுபவ நிலையில் ஒன்றுமை உணரப்பட்டாலும், நடைமுறை நிலையில் குரு–சீடன், இறைவன்–பக்தன் என்ற உறவுமுறை தொடர்கிறது. இதையே வேதாந்தம் “வ்யவஹாரிக சத்தியம்” மற்றும் “பரமார்த்த சத்தியம்” என்ற இரு நிலைகளால் விளக்குகிறது.

“தன்னை அறிந்தவன் குருவை அறிகிறான்; குருவை அறிந்தவன் அந்தர்யாமியை அறிகிறான்; அந்தர்யாமியை அறிந்தவன் எல்லாவற்றிலும் ஒரே ஆத்மாவையே காண்கிறான்.”
ஶ்ரீ குருப்யோ நமஃ 🙏

Leave a comment