
“Caller, the call and the called”
What is the mind? The mind is a collection of unending thoughts. Before a thought arises in the mind, a call regarding the thoughts occurs first, which then leads to the emergence of incessant thoughts. Invocation is related to time, time is related to circumstances, and circumstances are related to the karmic fruits of one’s past.
That is, circumstances change from time to time according to one’s past karmic results; as circumstances change, time is bound to change from time to time; as time changes, calls do not remain permanent but keep changing in the mind from time to time; and as calls change, thoughts also change constantly.
Therefore, if one has the skill to make the calling that arises in one’s mind permanent through the grace of the Guru, then the caller, the calling, and the called become one, and there will be permanent peace in the mind.
Sri Gurubhyo namaha. 🙏
“அழைப்பவர், அழைப்பு மற்றும் அழைக்கப்படுபவர்”
மனம் என்பது என்ன? இடைவிடாத சிந்தனைகளின் தொகுப்பு. ஓர் சிந்தனை மனதினில் உதயமாக முன்பே அதைப்பற்றிய ஓர் அழைப்பு முதலில் உருவாகி, பின் அதுவே இடைவிடாத எண்ணங்களாக ஆகுகின்றது. அழைப்பு என்பது காலத்தோடு தொடர்புடையது, காலம் என்பது சூழ்நிலைகளோடு தொடர்புடையது, சூழ்நிலைகள் என்பது அவரவர்களின் கடந்த கால கர்ம விளைவுகளோடு தொடர்புடையது.
அதாவது ஒருவரின் கடந்த கால கர்ம விளைவுகளுக்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும், சூழ்நிலைகள் மாறும் போது காலமும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும், காலம் மாறும்போது அழைப்புக்களும் நிரந்தரமாக இல்லாமல் அவ்வப்போது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும், அழைப்புக்கள் மாற மாற எண்ணங்களிலும் மாற்றங்கள் சதா இருந்து கொண்டே இருக்கும்.
எனவே ஒருவர் மனதில் தோன்றும் தம் அழைப்பை குரு அருளால் நிரந்தரம் ஆக்கிக் கொள்ளும் திறன் இருந்தால், அங்கு அழைப்பவர், அழைப்பு, மற்றும் அழைக்கப்படும் பொருள் மூன்றும் ஒன்றாகி மனதினில் நிரந்தர அமைதி ஏற்படும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

