Category: spirituality
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 3035 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலவி யவனேஇணரும் அவன்தன்னை என்னலு மாகான்துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே.” உணர்வும் அவனே உயிரும் அவனே:உலகில் உள்ள எண்ணற்ற ஜீவராசிகளில் மனிதப்பிறவி ஒன்றுக்கு மட்டும் தான், தான் கொண்ட மானுட வடிவை உணரும் தன்மை உண்டு. அத்தகைய உணர்வாகி நிற்பவன் ‘ அவனே என்னும் குருவாகி நிற்கும் சிவமே’ஆகும். அவனே அம்மானுட வடிவான உணர்விற்கு ஆதாரமாக விளங்கும் உயிர் வித்தாகவும் இருக்கிறான். புணர்வும் அவனே…
