Category: Mysticism
-
அப்பர் தேவாரம் 4-11-8
“இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.” இல்லக விளக்கது இருள் கெடுப்பது,:இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள, இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,…
