
திருப்பரங்குன்றம் (அக விளக்கம்):
புறத்தில் மதுரையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருப்பரங்குன்றம், அகத்தில் நமது உடம்பையும் குறிக்கிறது. ‘திரு’ என்பதற்கு தெய்வீகம், ‘பரம்’ என்பதற்கு உடம்பு மற்றும் மேலானது, ‘குன்றம்’ என்பதற்கு உறுதியான மலை போன்ற நிலை என்று பொருள்கள் உள்ளன.
அதாவது, இறைவன் குடியிருக்கும் குன்றாக இந்த உடம்பை உணர்வதே உண்மையான வழிபாடு, திருமூலரின் “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்ற வாக்கிற்கு ஏற்ப…
இதைத்தான் ஔவையார் தமது குறளில்…
“நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணில்…
முற்றும் அழியாது உடம்பு” என்று உரைத்துள்ளார்…
நம் புருவ மத்தியில், நெற்றிக்கு நேரே மனதை நிறுத்தினால்…
அங்கே முருகப்பெருமானின் ஞான ஜோதி என்றென்றும் பிரகாசிப்பதைக் காணலாம்!
திருப்பரங்குன்றம் வெளியிலும் இருக்கிறது… நம் உள்ளேயும் இருக்கிறது!. உள்ளே உரிமை கொண்டாடும் போதுதான், வெளியும் நம்முடையதாகிவிடும்…
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

