
‘நான்’ என்பது உண்மையில் உண்டா… இல்லையா? …
நாம் தினமும் அனுபவிக்கும் விழிப்பு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இரண்டு நிலைகளின் வழியாக, இந்த ‘நான்’ என்பதன் உண்மையை சற்று ஆழமாக உற்றுநோக்குவோம். …
நிலை 1: மனம் மற்றும் நினைவு
முதலில், மனதைக் கவனிப்போம். …
விழிப்பு நிலையில், மனம் நினைக்கிறது… உடனே “நான் நினைக்கிறேன்” என்று தோன்றுகிறது. …
ஆனால், ஆழ்ந்த உறக்க நிலையில்?
அங்கே மனம் எதையுமே நினைப்பதில்லை. “நான்” என்ற எண்ணமும் அங்கே எழுவதில்லை. …
எனினும், ஆழ்ந்த உறக்கத்தில் கிடைக்கும் அந்த அமைதியான அனுபவம்… அந்த அனுபவத்தை உணர்ந்த “நான்” என்னும் அனுபவ நினைவாக, நாம் விழித்தவுடன் வெளிப்படுகிறது. …
நிலை 2: புத்தி மற்றும் அறிவு
அடுத்ததாக, அறிவைக் கவனிப்போம். …
விழிப்பு நிலையில், அறிவு ஒன்றை அறிகிறது… உடனே “நான் அறிகிறேன்” என்று வெளிப்படுகிறது. …
ஆனால், ஆழ்ந்த உறக்க நிலையில்?
அங்கே அறிவு எதனாலும் அறியப்படுவதில்லை. “நான்” என்பதும் அங்கே எழுவதில்லை. …
எனினும், உறக்கத்தில் எதையும் அறியாமல் இருந்த அந்த அனுபவம்… அந்த அனுபவத்தை அறிந்த “நான்” என்னும் அனுபவ அறிவாக, விழிப்பு நிலையில் வெளிப்படுகிறது. …
நிலை 3: உடம்பு மற்றும் மெய் உணர்வு
அதேபோல், இந்த மனம் மற்றும் புத்தியின் வழியாக, விழிப்பு நிலையில் “இந்த உடம்பே நான்” என்று வெளிப்படுகிறது. …
ஆனால், ஆழ்ந்த உறக்க நிலையில், இந்த உடம்பு ‘நான்’ என்று உணரப்படுவதே இல்லை. அங்கே ‘நான்’ எழுவதுமில்லை. …
எனினும், உறக்கத்தில் கிடைக்கும் அந்த அனுபவம்… அந்த அனுபவத்தை உணர்ந்த மெய் உணர்வாக, “நான்” என்பதாக விழிப்பு நிலையில் மீண்டும் வெளிப்படுகிறது. …
முரண்பாடு: இருப்பும் இன்மையும்
ஆக, இதை ஆழமாகத் தொகுத்துப் பார்த்தால்… …
“நான்” என்பது நினைக்கப்படும், அறியப்படும், உணரப்படும், காணப்படும் ஒரு வஸ்துவாக இல்லாமல்… அதாவது, ஆழ்ந்த உறக்கத்தில் “நான்” என்பதே இல்லாமலும் இருக்கிறது. …
அதே சமயம், விழிப்பு நிலையில் நினைக்கப்படும், அறியப்படும், உணரப்படும், காணப்படும் ஒரு வஸ்துவாகவும் இந்த “நான்” இருக்கிறது. …
சுருக்கமாகச் சொன்னால்… உறக்கத்தில் மரணிக்கப்பட்ட, அதாவது இல்லாத நானாகவும்… விழிப்பு நிலையில் பிறப்பிக்கப்பட்ட, அதாவது இருக்கின்ற நானாகவும்… இது மாறி மாறி இருந்து கொண்டிருக்கிறது. …
அப்படியானால், இதில் எதுதான் உண்மை? …
உபநிடத சான்று: பிரகதாரண்யக உபநிடதம் (1.4.1)
இதற்கு, பிரகதாரண்யக உபநிடதம் (ஒன்றாவது அத்தியாயம், நான்காவது பிராம்மணம், முதல் மந்திரம்) இவ்வாறு கூறுகிறது: …
“படைப்பின் ஆரம்பத்தில் இறைவன் மட்டுமே இருந்தார். அவர் புருஷ வடிவில், அதாவது மனித உருவில் இருந்தார். தம்மைத் தவிர அவர் வேறு எதையும் காணவில்லை. எனவே, அவர் சிந்தித்தார். பிறகு, முதன்முதலாக ‘நான் அவரே’ என்று கூறினார். அதனால் “அஹம் நாம அபவத்” அவருக்கு “நான்’ என்ற பெயர் உண்டாயிற்று.” …
அதனால்தான், இன்றும் யாரிடமாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் “நான்” என்றே ஒவ்வொருவரும் தன்னைக் கூறுகிறார்கள். அதன் பிறகே, தனக்கென்று உரிய மற்ற அடையாளங்களைக் கூறுகிறார்கள். …
முடிவுரை: இயற்பெயரும் செயற்பெயரும் (பரம சத்தியம்)
உண்மையில், ஆழ்ந்த உறக்கத்தில் தம் தூய இருப்பைத் தவிர வேறு எதையும் உணராத, அதாவது “நான்” என்பதே இல்லாத நிலையில்… ஒவ்வொருவரும் படைப்பிற்கு முந்திய இறைவனாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். …
விழிப்பில் சிந்தனை தொடங்கியவுடன், ஆழ்ந்த நித்திரையில் “நான்” என்பதே இல்லாத இறைவனாக மட்டுமே விளங்கிக் கொண்டிருந்த தம் உருவையே… ஒவ்வொருவரும் முதன்முதலாக “நான் அவரே” — அதாவது ‘ஹம்’ (நான்), ‘ஸோ’ (அவரே) — “நான் அந்த இறைவனே” என்ற இயற்பெயராகவே தம்மை முதலில் கூறிக் கொள்கிறார்கள். …
எனினும், மனம், புத்தி, மற்றும் உடம்பு போன்ற கலவைகளால் உருவான மாயத் திரையால், அந்த இயற்பெயர் சிந்திக்கத் தொடங்கிய அக்கணமே மறைக்கப்பட… “இல்லாத நான்” என்பதை மற்ற அடையாளங்களுடன் சேர்த்து, தங்களின் செயற்பெயராகக் கூறிக் கொள்கிறார்கள். …
ஆக…
உண்மையில் “நான் உண்டு” — அது இறைவனின் இயற்பெயராக இருக்கும்போது! …
உண்மையில் “நான் இல்லை” — அது தனி மனிதனின் செயற்பெயராக மாறும்போது! …
இதுவே பரம சத்திய நிலை. …
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

