Ramana Maharshi’s True Meditation Perspective

Ramana Maharshi’s True Meditation Perspective
What is True Meditation? – The Perspective of Bhagavan Ramana Maharshi
When we hear the word “meditation,” many of us immediately think of sitting with closed eyes, observing the breath, or bringing a specific form to mind. However, the ultimate spiritual state of meditation is far deeper than that.

Bhagavan Ramana Maharshi has provided a wonderful and profound explanation regarding meditation.
The teachings of Maharshi, a notable figure of the twentieth century, emphasize this point.

One should not remain confined merely to the boundary of being a meditator. Instead, one must fully immerse themselves in the object’s nature and become one with it.

For example, when meditating on the Guru or Shivam, you must be completely drawn in and absorbed by the divine energy of that Guru or Shivam. This state itself is known as the State of Grace (Arul Nilai).

The dissolution of the separate sense of “I” occurs in that state of grace.
In that state of grace, the individual consciousness of “you” who meditates on the Guru or Shivam completely dissolves. No separate individual remains there. Instead, only the all-pervading essence of that consciousness—Pure Awareness—remains.
This alone is called true meditation in spirituality.
Sri Gurubhyo Namah 🙏

உண்மையான தியானம் என்றால் என்ன? – பகவான் ரமண மகரிஷியின் பார்வை:


தியானம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பலருக்கும் கண்களை மூடிக்கொண்டு அமர்வது, மூச்சைக் கவனிப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட உருவத்தை மனதுக்குள் கொண்டு வருவது போன்ற செயல்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தியானத்தின் உச்சக்கட்ட ஆன்மீக நிலை என்பது அதைவிட மிக ஆழமானது.
இதைப்பற்றி மகான் பகவான் ரமண மகரிஷி மிக அற்புதமான விளக்கத்தை வழங்கியுள்ளார்.


இருபதாம் நூற்றாண்டின் மகரிஷியின் வாக்கு:
வெறும் தியானம் செய்பவராக மட்டும் ஒருவன் தன் எல்லைக்குள் நின்றுவிடக்கூடாது. மாறாக, தியானிக்கப்படும் பொருளின் தன்மையில், அதாவது ஈர்ப்பின் தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதில் ஒன்றிப்போக வேண்டும்.
எடுத்துக்காட்டாக, குருவையோ அல்லது சிவத்தையோ தியானிக்கும்போது, அந்த குரு அல்லது சிவத்தின் திவ்ய சக்தியினால் நீங்கள் முழுமையாக ஈர்க்கப்பட வேண்டும். இந்த நிலைதான் ‘அருள் நிலை’ எனப்படுகிறது.


‘நான்’ என்ற தனி உணர்வு கரைதல்:
அந்த அருள்நிலையில், குருவையோ அல்லது சிவத்தையோ தியானிக்கும் ‘நீங்கள்’ என்ற தனிநபர் உணர்வு (Individual consciousness ) முற்றிலுமாகக் கரைந்துபோகிறது. அங்கே தனிப்பட்ட நபர் என்று யாரும் எஞ்சுவதில்லை. மாறாக, அந்த அந்த உணர்வை உணரும் சாராம்சமான எங்கும் வியாபித்த தூய விழிப்புணர்வு (Pure Awareness) மட்டுமே எஞ்சி நிற்கும்.


இதுவே ஆன்மீகத்தில் உண்மையான தியானம் என்று அழைக்கப்படுகிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment