ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்விது வாமே”.

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்:
ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அ, ஹூ, இ’, என்னும் மூன்று சொற்களுடன் கூடிய மூன்று மாத்திரைகளாக விரிவடைந்துள்ளது. மாத்திரை என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய அதன் கால அளவை தம்முள் அடக்கியது. அதனால் ஒவ்வொரு சொல்லுக்கும் (மாத்திரைக்கும்) முடிவு என்பதும் உண்டு.
அ, ஹூ, இ’, என்னும் இம்மூன்று வார்த்தைகள் குருவருளால் முறையாக ( इला ह हु) ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மூன்று மாத்திரைகள் (கால அளவுகள்) முறையாக பிராண அபானங்களில் பொருத்தப்படும் போது, வெளிப்படும் அப்பரம்பொருள் மாத்திரைகள் என்னும் காலங்கள் அற்றதாயும், ஓம் என்னும் ஓம்கார ஓசையும், ஈசனும் ஒருங்கிணைந்த உணர்வாகவும் இருக்கும்.
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்:
ஓம்காரத்தின் விரிவான இந்த மூன்று மாத்திரைகளில் ‘ அபானனில்’ (வெளி மூச்சில்) ஒடுங்க வேண்டிய மாத்திரைகளை (சொற்களை), குரு அருளால் முறையாக (इला ह) அறிந்து, அதை பொருத்தி, அதை அந்தர்யாமியாக விளங்கும் ஈசனின் (குருவின்) வெளிப்பாடாக உணரும்போது, அந்த சொற்களின் கால அளவு முடியும்போது, அதாவது அதன் ஓசை இறக்கும்போது, ஓசை இறந்தவர் நெஞ்சினுள் விழிப்புணர்வாக, அந்தர்யாமியாக விளங்கும் ஈசன் (குரு ) உறைவார்.
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் :
அதுபோன்றே ஓம்காரத்தின் விரிவான இந்த மூன்று மாத்திரைகளில் ‘ பிராணனில்’ (உள் மூச்சில்) ஒடுங்க வேண்டிய மாத்திரையை (சொல்லை), குரு அருளால் முறையாக (हु) அறிந்து, அதை அந்த உணர்வின்கண் பொருத்தி உச்சரிக்கும் போது, அச் சொல்லின் கால அளவு முடியும்போது, அதாவது அதன் ஓசை இறக்கும்போது, ஓசை இறந்தவர் அந்தர்யாமியாக விளங்கும் ஈசனோடு (குருவுடன் ) விழிப்புணர்வாக உறைவார்.
ஓசை உணர்ந்த உணர்விது வாமே:
ஈசனருளால் (குருவருளால்) மாத்திரைகள் என்னும் காலம் அற்ற, ஓம்கார ஓசையை (ॐ) இவ்வாறாக தம்முள் ஒடுங்கப் பெற்றவரிடமிருந்து வெளிப்படும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வு என்பதும் இதுவே ஆகும்.
திருச்சிற்றம்பலம் 🙏
______________________________________________
பின்குறிப்பு:
“இலா ஹா ஹு” (इला ह हु) என்பதைக் கொண்டு ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளை விளக்குவது, பொதுவாக அறியப்பட்ட திருமந்திர உரைகளிலும், வழக்கமான வேதாந்த அல்லது சைவசித்தாந்த விளக்கங்களிலும் வெளிப்படையாக காணப்படுவதில்லை என்பதுக்குரிய
விளக்கம்;
इला” (இலா) என்ற சொல் “சக்தியின் தெய்வம்” என்பதைக் குறிக்கிறது, இது துர்கா, பார்வதி மற்றும் சரஸ்வதியின் அடைமொழியாகும். “इला” (இலா) என்ற சொல் உணர்வையும் குறிக்கிறது, இது விழிப்பு நிலையில் உள்ள உடல் உணர்வு, கனவு நிலையில் விளங்கும் மன உணர்வு, மற்றும் ஆழ்ந்த உறக்க நிலையில் அறியப்படாமல் விளங்கிக் கொண்டிருக்கும் தூய உணர்வுக்கான அடைமொழியாகும். அவ்வகையில் इला” (இலா) என்ற சமஸ்கிருத சொல் மண்டூக்கிய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளபடி ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளின், விழிப்பு கனவு மற்றும் உறக்கம் இவைகளின் சாரமாகவே கருதப்பட வேண்டும். இம்மூன்று உணர்வுகளும் इला” (இலா) என்னும் மந்திர வார்த்தைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அதுபோன்றே சமஸ்கிருத வார்த்தையான ह (ஹா) என்பதற்கு “நிச்சயமாக”, “உண்மையாக” அல்லது “உறுதியாக” என்பது பொருளாகின்றது. இது சமஸ்கிருத மந்திர வார்த்தையான इला (இலா) உடன் மீண்டும் மீண்டும் அபான நிலையில் (வெளி மூச்சில்) ஒத்திசைக்கப்பட்டு. ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.
அடுத்து, சமஸ்கிருத வார்த்தையான “हु” (ஹூ) என்பது “அழைத்தல்” என்று பொருள். குரு உபதேசம் மூலம் – इला (இலா) , ह (ஹா), மற்றும் हु (hu) – மூன்று சமஸ்கிருத சொற்களையும் ஒவ்வொரு வெளிப்புற, உள் மற்றும் இடைநிலை சுவாசத்திலும் சரியாக பொருத்தி இடைவிடாது இயங்குவதின் மூலம், விழிப்பு கனவு மற்றும் உறக்கம் இன்னும் மூன்று நிலைகளையும் கடந்த துரியம் எனும் நிலைக்கு செல்ல முடியும். அவ்வாறு அந்த மூன்று உணர்வு நிலைகளையும் கடந்து மாத்திரை இல்லாத துரியத்தில் ஒடுங்கும்போது, திருமூலர் கூறும் ‘ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்’ என்ற அனுபவமும், ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் என்னும் அனுபவமும் ஒரே சமயத்தில் உணரப்படுகின்றது.
பிரஸ்னோபனிஷத் 5:6-ல் கூறப்பட்டுள்ளபடி, ஓம்கார சாரத்தின் மூன்று வார்த்தைகள் கொண்ட – इला (இலா) , ह (ஹா), மற்றும் हु (hu) -ஆகிய இவைகளின் மூன்று மாத்திரைகள் தனித்தனியாகப் பயன்படுத்தப்படும்போது, அவை அழிவுக்குரியவை என்பதை விளக்குகிறது. இருப்பினும், அவை பிராணாயாமத்தில் சரியான அளவோடு சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு, வெளிப்புற, உள் மற்றும் இடைநிலை சுவாசங்களுடன் பயன்படுத்தப்படும்போது, இதைப் புரிந்துகொள்பவர் “அசைக்கப்படுவதில்லை” (அதாவது, அச்சமற்றவராகவும் நிலையானவராகவும் மாறுகிறார்).
ஓம்கார தியானத்தின் சரியான மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாடு மரண பயத்தை எவ்வாறு மீறுகிறது என்பதை இந்த வசனம் விவரிக்கிறது. ஒருவர் என்றென்றும் நிலையான, மாறாத ஆற்றலாக மாற முடியும், இதன் மூலம் நிலையற்ற, மாறக்கூடிய ஆற்றலாக மாறுவதைத் தவிர்க்கலாம், அதாவது பிறப்புக்குப் பின் பிறப்புகளிலிருந்து விடுபடலாம்.
எனவே (இலா) , ह (ஹா), மற்றும் हु (hu) -ஆகிய வார்த்தைகள் நேரடியாக திருமந்திரத்தில் சொல்லப்படவில்லை என்றாலும், மறை பொருளாக பொதிந்து இருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

