“Loneliness and Existence”

“Loneliness and Existence”
“Loneliness begins when we forget our existence,’” Bhagavan Ramana Maharshi has taught us.

White light, when passed through a triple-paned glass, appears as seven distinct colors. Yet, in reality, only the white light truly exists; it does not see any color within itself.Similarly, in the waking state, each person’s body is like a three-paned mirror. When pure awareness is reflected through this body, it appears as though there are many separate individuals. But in truth, there are no “others.” Due to ignorance of this reality, we forget our true “existence,” and thus each of us feels isolated, since others appear to be real and separate.

In contrast, during deep sleep, the reflective activity within the same body temporarily ceases. What remains is only pure presence. Since there are no “others” there, there is no isolation. Every being experiences this state daily, though unknowingly.

One way to never forget our true “existence” is expressed in the words.“
காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”
As sung by Valla Peruman in Arudperunjyothi Akaval,

If we understand that we are not the ones who merely see the visions appearing through this body—which is like a three-paned mirror—but rather the ones who stand as pure existence and, through the Guru’s grace, enable all visions to appear, then loneliness can never arise.
Sri Gurubhyo Namah. 🙏

“தனிமை மற்றும் இருப்பு” என்பதை பற்றிய ஓர் சிந்தனை:

“நாம் நமது ‘இருப்பை’  மறக்கும்போது ‘தனிமை’  தொடங்குகிறது” என்று பகவான் ரமண மகரிஷி நமக்கு உபதேசித்துள்ளார்.

வெள்ளொளியானது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக ஊடுருவும் போது ஏழு விதமான தனித்தனி நிறங்களாக தம்மை காண்பிக்கும். எனினும் உண்மையில் இருப்பது வெள்ளொளி ஒன்றே , அது எந்த நிறத்தையும் காணாது.

அதுபோன்றே ஒவ்வொருவரது உடம்பும், விழிப்பு நிலையில் முப்பட்டை கண்ணாடிக்கு ஒத்ததே ஆகும். தூய விழிப்புணர்வு ஆனது முப்பட்டை கண்ணாடிக்கு ஒத்த அந்த உடம்பின் வழியே பிரதிபலிக்கும்  போது, “தனித்தனியாக பலர் இருப்பது போல் அது காண்பித்தாலும்”  உண்மையில் மற்றவர்கள் என்று யாரும் இல்லை.  இந்த உண்மை அறியாமையால் அல்லது அறியப்படாததால் ‘இருப்பு’  மறந்து போக, “மற்றவர்கள் உண்மையென தோன்றுவதால் நாம் தனிமைப்படுத்தப்பட்டதாக” ஒவ்வொருவரும் உணர்கின்றோம்.

மாறாக ஆழ்ந்த நித்திரை நிலையில் அதே உடம்பில் உள்ள பிரதிபலிக்கும் ஆற்றல் தற்காலிகமாக செயல்படாததால் , அங்கு மற்றவர்கள் என்று யாரும் இல்லாத, அதனால் நாம் தனிமையாக்கப்படாத,  ‘இருப்பு’  மட்டுமே தினந்தோறும்  ஆனால் இதுவும் அறியாமலேயே , ஒவ்வொருவராலும் அனுபவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாம் நமது ‘இருப்பை’  எப்போதும் மறக்காமல் இருக்க ஒரு வழி,
“காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”
என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமான் உரைத்தபடி,

முப்பட்டை கண்ணாடியை ஒத்த இவ்  உடம்பின் வழியாக ஊடுருவும் காட்சிகளை காண்பவனாக இல்லாமல், குரு அருளால் “இருப்பாகவே நிலைத்து”  காட்சிகளை தருபவனாக நாம் இருக்கிறோம் என்று அறிந்துணர்ந்தால், தனிமை என்பது ஒருபோதும் அங்கு தோன்றாது.
Sri குருப்யோ நமஹ 🙏

Leave a comment