
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.”
மாய விளக்கது நின்று மறைந்திடுந்:
மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்- உடல், மற்றும் மனம், புத்தி, பிராணங்கள், போன்றவைகள் ஒளிர்வது அதன்- அதனால்யே என்று எண்ணவைக்கும் மாயை என்னும் இல்லாத விளக்கொளி , குரு அருளால் கிடைக்கப்பெற்ற மெய்ஞானம் என்ற பொய்யா- விளக்கொளியில், மாயை என்னும் என்றுமே இல்லாத, பொய்யான இவ்- விளக்கொளி நின்றுபோய் மறைந்திடும் போது,
தூய விளக்கது நின்று சுடர்விடுங்:
தூய விளக்காக மெய் என்னும் அவ்- உடம்பினுள் மெய்யாகவே அதாவது உண்மையாகவே நின்று, சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் உயிர் என்னும் அணையா ஆன்ம விளக்கொளியினாலேயே,
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்:
காயம் என்னும் ஐந்து கோசங்களால் ஆன இவ்வுடல், மனம், புத்தி, பிராணங்கள், போன்றவைகள் ஓளிர்விக்கப்படுகின்றது என்ற மெய்யுணர்வில், இவ்வுடம்பானது அதனுள் குடிகொண்டிருக்கும் உயிர் என்னும் தூய விளக்கால், நெருப்புக் கனலாக ஆகிவிடும் போது,
சேய விளக்கினைத் தேடுகின் றேனே:
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக, இவ்வுடம்பைத் தாங்கிக் கொண்டும், இவ்- உடம்பிற்கு தாயாக இருந்து கொண்டும் ஒளிரும் என்னுயிர் விளக்கை, அதன் சேய் விளக்காக, நெருப்புத் கனலாக ஒளிரும் இவ் உடம்பைக் கொண்டு தேடுகின்றேனே என்று ஆதங்கமாக திருமூலர் தம் திருமந்திரம் வழியே நமக்கு எடுத்துச் சொல்லி உள்ளார்.
திருச்சிற்றம்பலம், 🙏

